திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை தகர குப்பம் பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் அருணகிரி (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் கோபி (21) ஆகிய இருவரும், வீட்டின் அருகே உள்ள பாறையின் மீது அமர்ந்திருந்துள்ளனர். அப்போது, மர்ம நபர் யாரோ ஒருவர், நாட்டுத் துப்பாக்கியின் மூலம் சுட்டதன் காரணமாக, அதன் குண்டுகள் அருணகிரி மற்றும் கோபி மீது பாய்ந்துள்ளது.
இதனையடுத்து, அங்கிருந்த உறவினர்கள், உடனடியாக அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளானர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இளைஞர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இளைஞர்களை பழிவாங்க மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டரா அல்லது ஏதேனும் வனவிலங்குகளை வேட்டையாடும் பொழுது எதிர்பாராத விதமாக குண்டுகள் பாய்ந்ததா உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “அய்யய்யோ பெட்ரோல் போடலையா..” நடுவழியில் நின்ற கார் - போலீசிடம் சிக்கிய இளைஞர்! - Thanjavur New Luxury Car Theft