சென்னை: சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்கு இன்று காலை 11.30 மணி அளவில் பள்ளி தலைமை ஆசிரியர் இமெயில் முகவரிக்கு ஓவியா உதயநிதி என்ற பெயரிலிருந்து வெடிகுண்டு மிரடல் வந்துள்ளது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், பள்ளிக்கு வந்த மயிலாப்பூர் உதவி ஆணையர், பட்டினம்பாக்கம் காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கு வந்தனர்.
பின் இமெயில் மூலம் வந்த குறுஞ்செய்தி குறித்து காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர். அப்போது, இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் எந்த இடத்தில் இருந்து வந்தது என பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள மற்றொரு தனியார் பள்ளிக்கும் இதே பாணியில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதுவும் புரளி என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பள்ளி நிர்வாகத்திற்கிடையே பெரும் அச்சத்தை உருவாக்கினாலும், இன்று மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை எனபதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே ஏற்பட்டிருக்ககூடிய அச்சம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவை டூ அபுதாபி நேரடி விமான சேவை.. எப்போது துவக்கம்?