ETV Bharat / state

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில்.. வேலை தேடும் பெண்கள் தான் டார்கெட்.. இருவர் சிக்கியது எப்படி? - Chennai prostitution arrest - CHENNAI PROSTITUTION ARREST

Chennai prostitutio: சென்னை வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் செய்து வந்த இருவரை கைது செய்த போலீசார் ஒரு பெண்ணை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட பஷிர் முகமது இப்ராஹிம்
கைது செய்யப்பட்ட பஷிர் முகமது இப்ராஹிம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 4:28 PM IST

சென்னை: சென்னையில் வேலைத்தேடி வரும் சில பெண்களிடம் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை மற்றும் அதிக ஊதியம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி சில கும்பல் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தும் குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதனைத் தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit ITPU-2) காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், வடபழனி, வடக்கு மாட வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ஒன்றை தீவிரமாக கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர், விபச்சார தடுப்புப் பிரிவு காவலர்கள் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பஷிர் முகமது இப்ராஹிம் மற்றும் தேவி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பஷிர் முகமது இப்ராஹிம் மற்றும் தேவி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒரு பெண்ணை மீட்ட போலீசார் அவரை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: நண்பர்களுடன் சூப் சாப்பிட சென்ற நபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.