திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் கிராமத்தில் ரம்யா என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று(செவ்வாய்கிழமை) அதே பகுதியை சேர்ந்த மன்சூர் (36) மற்றும் அவரது உறவினரான ஆசிரியர் நகரை சேர்ந்த ரியாஸ்(40) ஆகியோர் ரம்யா நடத்தும் பெட்டிக்கடையில் பத்து ரூபாயிக்கு விற்கப்படும் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்ததாக தெரிகிறது.
அந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலுக்கு அடியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் மன்சூர் மற்றூம் ரியாஸ் ஆகிய இருவருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்படவே இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்: கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கனிகிலுப்பை என்ற கிராமத்தில் பெட்டிக்கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கிக் குடித்த 6 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது திருப்பத்தூர் பகுதியில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்து உயிரிழந்த சிறுமி; அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!