ETV Bharat / state

கரூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது! - karur robbery case

Road Robbery: கரூர் அருகே இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் வழிப்பறி செய்து வந்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரின் புகைப்படம்
வழிப்பறியில் ஈடுபட்ட இருவரின் புகைப்படம் (Credit: ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 9:32 PM IST

கரூர்: கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த வீரப்பன் மகன் சண்மூகம் (53). இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில், ஏமூர் அருகே உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் அருகே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் லிப்ட் கேட்பது போல் நடித்து, வாகனத்தை நிறுத்தி சண்முகத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார்.

பின்னர் சண்முகத்தை தாக்கிவிட்டு இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம், வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல், வெங்கல்பட்டி திருச்சி பைபாஸ் சாலை அருகே இரவு நேரத்தில் தனியாகச் சென்ற அர்ஜுனன் என்பவரை வழிமறித்து தாக்கி, இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்வோரை குறிவைத்து வழிப்பறியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைக் கண்டறிய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் உத்தரவின் பேரில், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மேற்பார்வையில், பசுபதிபாளையம் வட்ட ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில், பசுபதிபாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சையது அலி, சிறப்பு உதவி ஆய்வாளர் எழிலரசன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், பழங்குற்றவாளிகளை பற்றி தீவிர விசாரணை செய்தும் வந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் கோட்டூர் பெரிய கரை பகுதியைச் சேர்ந்த தென்னரசு(23), சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் அச்சாணி பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (28) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் திருடிய பொருட்களை மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும், கடந்த சில நாட்களாக தொடந்து வழிப்பறியானது நடைபெற்று வந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கத்திரி வெயிலைச் சந்திக்கும் தமிழ்நாடு.. கோடையில் மழை பெய்யுமா? வானிலை மைய இயக்குனர் தகவல்! - Agni Nakshatram 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.