ETV Bharat / state

திருவள்ளூரில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - died drown in river water - TIRUVALLUR STUDENTS DIED

Two Boys died: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றபோது, நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்கிய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

two boys died drown in river water
two boys died drown in river water
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 10:24 AM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜீவ் காந்தி. இவரது மகன் வெற்றி (8), அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் என்பவரது மகன் கவின் (6), அதே பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், நண்பர்களான இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால், மாலையில் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, சிறுவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்கிய போது, நீச்சல் தெரியாத காரணத்தால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.

பின்னர் சிறுவர்கள் சத்தம் கேட்டு, அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து சிறுவன் ஒருவரின் தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த கிராம மக்கள், நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து சிக்கிய பணம், பரிசுப் பொருள்.. நயினார் நாகேந்திரன் தரப்பு விளக்கம் என்ன? - BJP Nainar Nagendran

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.