ETV Bharat / state

ஆவடியில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை: இருவர் கைது.. குற்றவாளியை நெருங்கிய போலீஸ்! - Avadi robbery case - AVADI ROBBERY CASE

Avadi robbery case: சென்னை ஆவடியில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 3:55 PM IST

சென்னை: ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குக் கடந்த 15ஆம் தேதி வந்த நான்கு மர்ம நபர்கள் பிரகாஷிடம் துப்பாக்கியைக் காட்டி கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு தாங்கள் கொண்டு வந்த பையில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ.5 லட்சம் பணம், ஐபோன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் பிரகாஷ் முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் 8 தனிப் படை அமைத்து ஆந்திரா ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் தேடுதல் வேட்டையைத் துவக்கினர். கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் தினேஷ்குமார், சேட்டன் ராம் ஆகிய இருவரும் சென்னையில் தங்கியிருக்கும் நிலையில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் நெருங்கி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி ரூ.1.5 கோடி கொள்ளை.. ஆவடி நகைக்கடையில் பரபரப்பு சம்பவம்! - AVADI JEWELLERY SHOP THEFT

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.