ETV Bharat / state

கொலை செய்துவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்ட முயற்சி.. சினிமா பாணியில் பலே கும்பலை கைது செய்த போலீஸ்.. சென்னை பகீர் சம்பவம்! - பூந்தமல்லி இளைஞர் படுகொலை

Chennai Youth murder case: சென்னை அடுத்த நசரத்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை கடத்தி கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்ட முயன்ற நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் படுகொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 12:49 PM IST

சென்னை: பூந்தமல்லி அடுத்த நசரப்பேட்டை, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் கருக்கா ஸ்டீபன் என்கிற ஸ்டீபன்(22). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் இவர், நேற்று (வியாழக்கிழமை) இரவு இவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள், நசரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனை அடுத்து ஸ்டீபனை கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை வெளிவட்ட சாலையில் (Chennai Outer Ring road), வண்டலூர் - மீஞ்சூர் இடையேயான சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே கடத்தப்பட்ட ஸ்டீபன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், நசரதப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, ஸ்டீபனின் உடல் பாகங்களை வெட்ட முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயற்சி செய்துள்ளது. பின்னர், ஈசாக் மற்றும் விக்னேஷ் எனும் இருவரை போலீசார் மடக்கி பிடித்து, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஸ்டீபனின் உடலை உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிடிபட்ட இருவரிடமும் கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கஞ்சா விற்பனை செய்வதில் இவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஈசாக்கு தரப்பினர் கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் குறித்து ஸ்டீபன் போலீசாரிடம் தகவல் தெரிவித்து விடுவதாக மிரட்டியதாகவும், மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈசாக் தரப்பினரை ஸ்டீபன் தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஸ்டீபனை கடத்தி கொலை செய்ததாக, பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உள்ளாடையில் ஒளித்து தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர்கள்.. கடத்தல் ஆசாமியை தேடும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.