சென்னை: நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
ராகுலுக்கு விஜய் வாழ்த்து!#RahulGandhi #Congress #TVK #TVKVijay #LeaderOfOpposition #ETVBharatTamil@tvkvijayhq @RahulGandhi pic.twitter.com/5zUsGrU1se
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) June 26, 2024
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் ஜூன் 24, 25 ஆம் தேதிகளில் பதவியேற்று கொண்டனர். இதற்கிடையே, பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அத்துடன், ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Congratulations to Hon'ble Thiru. @RahulGandhi Avargal for being unanimously elected by @INCIndia and its allies as Leader of Opposition in the Lok Sabha.
— TVK Vijay (@tvkvijayhq) June 26, 2024
My best wishes to serve the people of our Nation.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தவெக அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சி தலைவராக செயல்படவுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்" என்று விஜய் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்களவை எதிர்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!