ETV Bharat / state

“சபாநாயகர் என்னைப் பேச விடவில்லை”.. தவாக தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு! - TVK Velmurugan - TVK VELMURUGAN

TVK Velmurugan alleged Assembly Speaker: தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், சட்டமன்றத்தில் இன்று, தான் முக்கியமான கருத்தை முன் வைக்க முயன்றதாகவும், ஆனால் அதற்கு சபாநாயகர் அப்பாவு தன்னைப் பேச அனுமதிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தவாக தலைவர் வேல்முருகன்
தவாக தலைவர் வேல்முருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 5:35 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “நான் இன்று சட்டமன்றத்தில் முக்கியமான கருத்தை முன்வைக்க முயன்றேன். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. அந்த கருத்து என்னவென்றால், யுபிஎஸ்சி தேர்வு நடத்தும் உயர்பதவிகளில் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மருத்துவம் படிப்பதற்கு எப்படி மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி இருக்கிறதோ, பொறியியல் படிப்பு படிப்பதற்கு எப்படி பொறியியல் கல்லூரி மாவட்டம்தோறும் இருக்கிறதோ, அதேபோல தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் ஒரு யுபிஎஸ்சி பயிற்சி நிலையம் மற்றும் ஒரு டிஎன்பிஎஸ்சி பயிற்சி நிலையம் வைக்க வேண்டும்.

இதனை தமிழ்நாட்டில் சாதி, மதங்களை கடந்து அனைத்து மாணவர்களும் அரசினுடைய முழு செலவோடு சர்வதேச தரத்தில் அங்கு பயிற்சி மையங்களை உருவாக்கி, சர்வதேச நூலகங்களும் அங்கு உருவாக்கி, இளைய தலைமுறை மாணவர்கள் இந்தியாவில் நடைபெறும் யுபிஎஸ்சி போட்டி தேர்வில் உயர் இடத்தைப் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். என்னுடைய மிகவும் பின்தங்கிய பண்ருட்டி தொகுதியில் இரண்டு சகோதரிகள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் ஆக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுடைய கருத்தும் கூட இது தான்.

அரசு இதே போன்ற வசதிகளை மாவட்டம் தோறும் பயிற்சி மையங்களையும், தங்கும் விடுதிகளையும் உருவாக்கினால் தமிழக மாணவர்களால் இந்திய அளவில் மிகச் சிறந்த அளவில் முதல் மூன்று இடங்களை பெற முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள். அதற்கான கோரிக்கைகளை முன்வைக்க இன்று சட்ட பேரவையில் எழுந்து நின்றேன். ஆனால் பேரவை தலைவர் என்னை பேச அனுமதிக்கவில்லை. சட்டசபையில் கிடைக்காத வாய்ப்பை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறேன்.

இந்த கருத்துக்களை மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த வீர சிவாஜி என்ற தம்பி காஷ்மீரில் நடைபெற்ற குத்து சண்டையில் இந்திய அளவில் பதக்கங்களை வென்றுள்ளான். ஆனால் அவனுக்கு காஷ்மீர் செல்வதற்கு கூட பணம் இல்லை. விளையாட்டிற்கான ஆடைகள் வாங்க கூட காசு இல்லை. அவன் அரசு இயந்திரங்களையோ, அரசை தொடர்பு கொள்ளுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இதே போல கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவன் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளான். இப்படி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முதல் தலைமுறை நரிக்குறவர் ஆதிதிராவிடர் இளைஞர்களை அரசு கண்டறிந்து அவர்களுக்கு சென்னையில் தங்கும் விடுதி கொடுத்து விளையாட வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை வைக்க நினைத்தேன்.

ஆனால், பேரவைத் தலைவர் எனக்கு வாய்ப்பு தரவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்கள் வெற்றி நாளுக்கு ஏன் நாள் குறைந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பிறகு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு, டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் அரசு சார்பில் உயர் தர பயிற்சி மையங்களை நிறுவ வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் சாத்தியமற்றது.. அண்ணாமலை கூறும் காரணம் என்ன? - Annamalai comment Hosur airport

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.