ETV Bharat / state

கட்சித் தலைவராக முதன்முதலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்! - Vijay garlanded at periyar statue - VIJAY GARLANDED AT PERIYAR STATUE

தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று சென்னை பெரியார் திடலில் அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 5:38 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் தி கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும், விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அரசியில் கேரியரைப் பொருத்த வரை, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அன்றைய தினத்தில் இருந்தே அவரது நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. ஒரு புறம் தான் திட்டமிட்டிருந்த படங்களிலும், மறுபுறம் கட்சியின் செயல்பாடுகளிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார்.

குறிப்பாக, இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு, தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிப்பது, கட்சியின் கொடி, முதல் மாநில மாநாடு ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார்.

இதையும் படிங்க : சமூகநீதிப் பாதையில் பயணம்.. பெரியார், மோடிக்கு விஜய் வாழ்த்து! - Vijay Wishes Periyar Bday

அடுத்தகட்ட நகர்வாக தவெக மாநாடு பணிகளுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்த கட்சியாக அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி, மாநாடு நடத்துவதற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்துள்ளது.

இதற்கிடையே பண்டிகை, தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் என தவெக சார்பில் வாழ்த்து செய்தி கூறுவது வழக்கம். சமீபத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இன்று பிரதமர் மோடி மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜய்யுடன் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் உடனிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.