ETV Bharat / state

“தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும்” - தவெக மாநாட்டுக்காக விஜயின் தந்தை சிறப்பு பூஜை! - VIJAY FATHER ABOUT TVK

தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும்; அதற்கு மாநாடு எந்த தடையும் இன்றி நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என இன்று சிறப்பு பூஜை செய்துள்ளோம் என விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

அன்னதானம், விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்
அன்னதானம், விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 4:22 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு எந்த தடையுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என புளியந்தோப்பு விஜய் ரசிகர் மன்றம் சார்பில் கொரட்டூரில் உள்ள விஜயின் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஜய் மாநாடுக்காக பூஜை: அதில் தவெக கட்சி தலைவர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் தந்தை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பூஜை நிறைவடைந்ததையடுத்து, பூஜைக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் சந்திரசேகர் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "விஜயின் நிறம் வெளிப்பட்டுவிட்டது" - ஹெச்.ராஜா விமர்சனம்

விஜய் தந்தை கருத்து: இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் கூறுகையில், “ விஜய்யின் த.வெ.க. முதல் மாநாடு வரும் ஞாயிற்றுகிழமை நடக்க உள்ள நிலையில் இந்த மாநாடு வெற்றிகரமாக நடக்க வேண்டும் என இந்த பூஜை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என இந்த பூஜையை தொண்டர்கள் முன்னெடுத்து நடத்தினர்.விஜய் அரசியலில் நல்ல பெயருடன் பெரிய நிலைமைக்கு வர வேண்டும்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திரசேகரிடம் இந்த கட்சியில் உங்களது பொறுப்பு என்ன கேள்வி எழுப்பினர். அதற்கு சந்திரசேகர் சிரித்துக் கொண்டே கைக்காட்டி கடந்து சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.