ETV Bharat / state

"தோழர்களே வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம்" - தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.. - தவெக தலைவர் விஜய்

Bussy Anand: கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

TVK General Secretary Bussy Anand
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 8:35 PM IST

சென்னை: தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

நடிகர் விஜய் இது தொடர்பாக மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு, தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார். மேலும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்துச் செயல்படப் போவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும், அதனைத் தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும், இரண்டு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 100 பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளார். மேலும் அடுத்த வாரம் செயலி தொடக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் தனது X தளத்தில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.

அதில், நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன். கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளை கழகத் தோழர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.