ETV Bharat / state

"அதிமுக நல்லவர்கள் கையில் வரவேண்டும் என அண்ணாமலை நினைத்துள்ளார்" - டிடிவி தினகரன் பேட்டி! - TTV Dhinakaran

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 6:58 PM IST

TTV Dhinakaran: “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பாஜகவிற்கு பெரிய மரியாதையும், அன்பும் உள்ளது. அவர்கள் ஆரம்பித்த கட்சி அழிந்து விடக்கூடாது, நல்லவர்கள் கையில் வரவேண்டும் என நினைத்துள்ளார் அண்ணாமலை” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran Press Meet
TTV Dhinakaran Press Meet

TTV Dhinakaran Press Meet

தேனி: அமமுக பொதுச் செயலாளரும், தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன், இன்று (ஏப்.21) கம்பத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுபால் தாயி அம்மன் கோயில் விழாவிற்கு வந்தார். அதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "தேர்தல் முடிந்த பின்பு இரண்டு நாட்களாக இங்கு தான் உள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள், அமோக வெற்றி பெறுவீர்கள் என கூறுகின்றனர். நான் கருத்துக்கணிப்பெல்லாம் நடத்தவில்லை. மக்கள் சொல்கிற கருத்துக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

14 ஆண்டுகளுக்குப் பின் அரசியல் ரீதியாக வந்தாலும், இடையில் சில ஆண்டுகளாக இந்த தேனி பகுதிக்குள் வந்து சென்றுள்ளேன். தற்போது வேட்பாளராக வந்த போது, மக்கள் அவர்களது இல்லங்களில் ஒருவராக என்னைப் பாவித்து உற்சாகமாக வரவேற்கின்றனர்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் எல்லோரும் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 1999-ல் நான் தேர்தலில் நின்றேன். அப்போது, ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2011க்குப் பிறகு தேர்தலில் பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது.

நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது கூட எடப்பாடி பழனிசாமி தரப்பில், வாக்குக்கு ரூ.10,000 கொடுத்தனர். இதனால் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் டோக்கன் கொடுத்தனர். அது எனது கவனத்திற்கு வந்ததும், அதைத் தடுத்து நிறுத்தினேன். ஆனால், நான் டோக்கன் கொடுத்ததாகத் தவறான செய்தியைப் பரப்பினர்.

என்னை ஒவ்வொருவரும் அவர்களது வீட்டுப் பிள்ளையாகக் கருதுகின்றனர். சொந்தமாக கருதி என்னை வரவேற்கின்றனர். அவர்களை அவமதிக்கும் விதமாக ஓட்டுக்குப் பணம் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் என்னை வெற்றிபெறச் செய்தால், தொடர்ந்து அவர்களுக்கான என்ன ஒரு உதவி செய்ய வேண்டுமோ, அதனைச் செய்வேன்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பாஜக என்ற கட்சிக்கு பெரிய மரியாதையும், அன்பும் உள்ளது. அவர்கள் ஆரம்பித்த கட்சி அழிந்து விடக்கூடாது, நல்லவர்கள் கையில் வரவேண்டும் என நினைத்துள்ளார், அண்ணாமலை. என்.டி.ஏ கூட்டணி இந்த தேர்தலில் மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்த முறை உறுதியாக நல்ல வாக்கு சதவீதம் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது" என்று பேசினார்.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம்’ போட்டி இன்று மாலை நடைபெறுகிறது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.