ETV Bharat / state

தேர்தல் பரப்புரையில் தாமதம்.. காத்திருந்த மக்களுக்கு டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை! - ttv Dhinakaran theni campaign - TTV DHINAKARAN THENI CAMPAIGN

TTV Dhinakaran: தேனி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன், பிரச்சார நேரம் முடிந்ததால், மீதம் இருந்த பகுதிகளுக்குச் சென்று கையசைத்துவிட்டுச் சென்றார்.

இரவு 11 மணி வரை காத்திருந்து வரவேற்பு அளித்த பொதுமக்கள்
தேனியில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 3:01 PM IST

டிடிவி தினகரன் பிரசாரம்

தேனி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைp போட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுth தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் மார்ச் 27ஆம் தேதியாகும். மனுth தாக்கலுக்கு நாளை ஒரு நாள் மட்டும் உள்ளதால், முக்கிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள், நேற்று முதலே வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை சுயேட்சை, அதிமுக மற்றும் நாதக கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுth தாக்கல் செய்துள்ளனர். நாளை திமுக வேட்பாளர் தங்க தமிழ்sசெல்வன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றனர். கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், இந்த முறை திமுக சார்பாக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) காலை பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “14 ஆண்டுகள் ராமன் வனவாசம் சென்றது போல், சதியால் உங்களிடம் இருந்து பிரித்து விட்டார்கள். மீண்டும் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறான். நான் பிறந்த ஊர் போல ஒவ்வொரு தெருவும் பெரியகுளம் எனக்கு பரிச்சயம். 14 ஆண்டுகள் வனவாசம் என்று ராமர் என்ற அவதார புருஷரோடு என்னை ஒப்பிடவில்லை. அந்த கால அளவைச் சொல்கிறேன்" என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

14 இடங்களில் தினகரன் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், எருமலை நாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி, எ.புதுப்பட்டி ஆகிய 3 இடங்கள் மீதமிருந்த நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, 10 மணியளவில் பரப்புரை நேரம் ஓய்ந்தது. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதால், இந்த மூன்று பகுதிகளிலும் பிரச்சாரம் வாகனத்தில் சென்றவாறே அப்பகுதியில் இருந்த மக்களுக்கு கையசைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கோம்பை, பண்ணைபுரம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு வருவார் என்று தொண்டர்கள் காத்திருந்துள்ளனர். தேர்தல் பிரச்சார நேரம் முடிந்தாலும், அப்பகுதிக்கு பிரச்சார வாகனத்தில் வந்த டிடிவி தினகரனுக்கு, அப்பகுயில் காத்திருந்த மக்கள் வரவேற்பளித்துள்ளனர். தங்களிடம் பேசி விட்டுச் செல்ல வேண்டும் என்று தொண்டர்கள் அவரது வாகனத்தை மறித்துள்ளனர்.

ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறக்கூடாது எனக் கூறிவிட்டு, டிடிவி தினகரன் கிராம மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, அவர்கள் வழங்கிய சால்வைகள் மற்றும் கிரீடங்களை பெற்றுக் கொண்டு வாகனத்தில் இருந்தவாறு கையசைத்ததோடு, மீண்டும் தேர்தல் பரப்புரைக்கு நேரத்துடன் வந்து, உங்கள் மத்தியில் பேசுகிறேன் என்று நிர்வாகிகளிடம் கூறிச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. வாக்கு சேகரிப்பின் போது நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! - Mk Stalin Thoothukudi Campaign

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.