ETV Bharat / state

“ஜெயலலிதாவைப் பற்றி அண்ணாமலை தவறாக பேசவில்லை” - டிடிவி தினகரன் பதில்! - TTV Dhinakaran

TTV Dhinakaran: தேர்தல் முடிந்த பிறகு அதிமுக எனது தலைமையில் ஒன்றிணையும் என அவரது கருத்தையே அண்ணாமலை கூறியதாகவும், ஜெயலலிதாவைப் பற்றி அண்ணாமலை தவறாக பேசவில்லை, இதற்கு பெரிய அளவில் கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டியது தேவையில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

TTV Dhinakaran
டிடிவி தினகரன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 3:19 PM IST

Updated : May 26, 2024, 3:32 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமீபத்தில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறைக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. தமிழக அரசாங்கத்திற்குள் உள்ள இரண்டு துறைகளுக்கு இடையே பிரச்சினை ஏற்படுவது பொதுமக்களுக்கு நல்லது அல்ல.

டிடிவி தினகரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவைப் பற்றி தவறாக பேசவில்லை. இதற்கு பெரிய அளவில் கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டியது தேவையில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் உள்ள இந்துத்துவா வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல திராவிட கட்சி தலைவர்கள் வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வேஷம் போடுவார்கள்.

இந்துவாக பிறந்த எல்லாரும் திருடர்கள் என்று கருணாநிதி கூறியதற்கு, அந்த காலத்தில் பலரும் வரவேற்ற காலம் உண்டு. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், முதலமைச்சராக இல்லாத காலத்திலும் இந்து வழிபாட்டில் உள்ள நெறிமுறைகளையும், வழிபாடுகளையும் பின்பற்றியவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை இருந்தால் தான் பிற மதத்தை சமமாக பாவிக்க முடியும்.

சில நபர்கள் போல் ஜெயலலிதா அரசியலுக்காக பேசுபவர் அல்ல. பாஜகவுடன் நான் கூட்டணியில் இருப்பதாலோ, அண்ணாமலை எனது நண்பர் என்பதாலோ தான் பேசவில்லை. அவர் பேசியதை படித்துவிட்டு தான் இதை கூறுகிறேன். அதேபோல், தேனியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அண்ணாமலை தேர்தல் முடிந்த பிறகு அதிமுக, டிடிவி தினகரன் தலைமையில் ஒன்றிணையும் என்று அவரது கருத்தை கூறியுள்ளார்.

அதிமுகவை அழித்து பாஜக வளர பார்க்கிறது என்று கூறுவது பொய். ஜெயலலிதாவின் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களிடம் அந்த கட்சி செல்ல வேண்டும் என்பது ஜெயலலிதாவின் தொண்டனான எனது விருப்பம். துரோக சிந்தனை உடைய பழனிசாமி தலைமை பதவி வகிப்பதால் தான் அந்த கட்சி பலவீனம் அடைந்து வருகின்றது. தேர்தலில் அவர்கள் எப்படி பணியாற்றினார்கள் என்பது வருகிற 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் தெரியவரும்.

நிர்வாகிகள் எல்லாம் துரோகம் செய்வதாக அவரது வாயாலே தெரிவித்துள்ளார். ஒரு தேர்தலில் வெற்றி என்றால் தன் மார்பை தட்டிக் கொள்வதும், தோல்வி என்றால் மற்றவர் தலையில் கட்டுவதும் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகும், தலைமைப் பொறுப்பு ஏற்ற பிறகும் அவர் சந்தித்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளார். இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப்படுவார்.

304 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் இளைஞர்களைக் குறி வைத்து போதைப் பொருள் வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டியது அரசின் கடமை. இதனைச் செய்வதை விட்டுவிட்டு காவல்துறை, மற்றொரு அரசுத் துறை அலுவலர்களின் மீது தங்களது அதிகாரத்தை காண்பிப்பது என்பது தவறானது. யார் மீதும் எந்த வழக்கு வேண்டுமானாலும் போடுவது காவல்துறையின் மீது உள்ள நம்பிக்கை பொதுமக்களுக்கு குறையும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மன்னராக இருந்தவர் இப்போது தெய்வமாகிவிட்டார் - மோடியை விளாசிய பிரகாஷ்ராஜ்! - Actor Prakash Raj

Last Updated : May 26, 2024, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.