ETV Bharat / state

பாஜகவினரின் குற்றப் பின்னணியை தமிழிசை நிரூபித்தால் பதவி விலகுகிறேன்: திருச்சி சூர்யா சவால் - Tamizhisai Vs BJP

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 10:58 AM IST

Tamizhisai Vs BJP: பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியுடன் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் எனவும், தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை எனவும் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா கூறியுள்ளார்.

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலத்தில் அதிக வாக்குகளை இந்த மண்டலத்தின் தலைவர் கருப்பையா பெற்றுள்ளார். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்ற திராவிட கட்சிகளின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பணமில்லாமல் தேர்தலை சந்திப்போம் என்கிற முடிவை எங்கள் மாநில தலைவர் எடுத்தார். அதற்கான ஆதரவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக உழைத்த கட்சி நிர்வாகிகளின் இல்லங்களுக்கே சென்று அவர்களை சந்தித்து வருகிறோம் என்றார். மத்திய அமைச்சரவையில் தமிழர்கள் இடம்பெறாதது வருத்தமாக உள்ளது.

திருச்சி சூர்யா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இது போன்ற வருத்தம் உள்ள மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், மூன்று பேர் மத்திய அமைச்சராகவும், மூன்று பேர் ஆளுநர்களாகவும் உள்ளனர். வருகின்ற 2026இல் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதரவுடன் தான் பயணிக்க முடியும் என்பதை நாங்கள் முதன்முதலாக உடைத்து இருக்கிறோம்.

பெரிய சாம்ராஜ்யமான அதிமுக பல இடங்களில் தடம் தெரியாமல் போய்விட்டது, சில இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாஜகவால் தோல்விகள் அதிகமாகிறது. தமிழகத்தில் அதிமுகவை விட பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. 2024 அதிமுகவை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம், 2026 திமுகவை பின்னுக்கு தள்ளி ஆட்சிக்கு வருவோம். திமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதால் தான் எட்டு சதவீத வாக்குகளை இழந்திருக்கிறார்கள். அதிமுகவை சார்ந்த ஆதரவுகள் சீமானுக்கு கூட சென்றுள்ளது.

திமுகவிற்கு எதிரான கட்சி அதிமுகவா, பாஜகவா என்கிற குழப்பம் இருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவின் மூலம் பாஜக தான் 2026இல் திமுகவை எதிர்க்க சரியான கட்சி என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர். திமுக நீட்டை ரத்து செய்வதாக கூறினார்கள் செய்யவில்லை, மத்திய அரசை குறை சொல்லி மட்டும்தான் ஆட்சி நடத்தினார்களே தவிர உரிமையைக் கூறி வாங்கக் கூடிய தகுதி அவர்களுக்கு இல்லை. 40 தொகுதியில் ஜெயித்ததால் நல்ல ஆட்சி நடப்பதாக நினைக்கிறார்கள், 2026இல் மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

36 கட்சிகள் சேர்ந்து ஒருவரை காலி செய்ய முயற்சிக்கிறார்கள். அயோத்தியில் ராமரை பிரதிஷ்டை செய்வதற்காக வைத்தோமே தவிர மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. வாக்கு இயந்திரத்தில் முறையீடு செய்தோம் என்பது உண்மை என்றால் பல இடங்களில் பெருவாரியாக வெற்றி பெற்று இருப்போம்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றாலும் நாடாளுமன்ற தொகுதிகளில் தற்போது பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். நான் திமுகவில் இருந்த போது எனது மகன் பிறந்த நாளுக்கு தமிழிசை வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் என் மீது பாசம் கொண்டவர். அவரை உருவ கேலி செய்த போது அவருக்கு கோபம் வந்தது.

ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதனை திமுகவினர் கேலி செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியுடன் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன்.

தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை, அப்படி இருந்தாலும் அது முன்பு இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால் சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் அப்படி பதிவிட்டேன். வருகின்ற 2027 வரை அண்ணாமலை தான் மாநிலத் தலைவராக தொடர்வார். 2026இல் முதலமைச்சர் ஆவார்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விரைவில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு குறித்த அறிவிப்பு... புஸ்ஸி ஆனந்த் சூசகம்! - TVK Maanaadu in Madurai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.