ETV Bharat / state

கேக் வெட்டி கொண்டாடப்பட்ட யானைகள் தின விழா! திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம் - world elephant day celebration - WORLD ELEPHANT DAY CELEBRATION

Trichy World Elephant Day Celebration: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில், யானைகளுக்கு உணவு, பழ வகைகள் படைக்கப்பட்டு, கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

யானைகள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்
யானைகள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 9:29 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையம் காப்புக்காட்டு பகுதி உள்ளது. இங்கு கடந்த 2019-ஆம் ஆண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 50 ஏக்கர் நில பரப்பளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டது.

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகள் தினம் கொண்டாட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமானது, மத்திய விலங்கு காட்சியக ஆணையம், அனுமதியுடன் தமிழ்நாடு அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளை பராமரித்து, வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில், சட்ட விரோதமாக வைத்திருந்த தனியார் யானைகள், மற்றும் உரிய பராமரிப்பு இல்லாத கோயில் யானைகளையும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரிலும், தலைமை வன உயிரின பாதுகாப்பு அலுவலர் உத்தரவின் பேரிலும் 10 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் மற்றும் திருச்சி மாவட்ட வன அலுவலர் கீர்த்திகா அறிவுரையின்படி, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணன், குருநாதன், சிந்துஜா, சதீஷ் ராகவன் மற்றும் வன பணியாளர்களுடன் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழ வகைகள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய திருச்சி மாவட்ட வன அலுவலர் கீர்த்திகா ‘இந்த யானைகள் தினத்தில் யானைகளின் முக்கியத்துவத்தையும், காடுகளை காப்பதில் யானைகளின் பங்களிப்பையும் உணர்த்தும் சிறப்புகளையும் அனைவருக்கும் வழிவுறுத்தும் வகையில் விழா கொண்டாடப்பட்டது” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: உலக யானை தினம்: யானைகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? - வனத்துறையினர் கூறும் காரணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.