ETV Bharat / state

காதலர் தினம் 2024; பதாகைகளை ஏந்தி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி!

Valatiens Day Awareness: உலக காதலர் தினத்தை முன்னிட்டு விவசாயி ஒருவர், காதலர்கள் விலகி இருப்பது தன்மானம், இணைந்து இருப்பது காதலுக்கு அவமானம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மணப்பாறை சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பதாகைகளை ஏந்தி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 5:44 PM IST

பதாகைகளை ஏந்தி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி

திருச்சி: பிப்ரவரி 14 உலக காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காதலர் தினமான இன்று, உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பல்வேறு விதமாக, தங்களது காதலை வெளிப்படுத்திக் கொண்டாடி வருகின்றனர். இதற்கு சமீப காலமாக இந்தியாவில் சில அமைப்புகள், பொது இடங்களில் காதலர்கள் கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிபட்டியைச் சேர்ந்த சரவணன் (விவசாயி), திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள முக்கிய வீதிகளில், காதலர்கள் கண்ணியமாக நடந்து கொள்வதற்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் அணிந்து கொண்டும், அதனை கைகளில் ஏந்தியவாறும் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனைக் கண்ட பொதுமக்கள், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரை புகைப்படம் எடுத்து தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் தங்களது கருத்துக்களையும் சேர்த்து பதிவிட்டு கொண்டனர். அதனைத் தொடர்ந்து, இது குறித்து பேசிய சரவணன், “நம் முன்னோர்கள் காலங்காலமாக நமது பண்பாடு, கலாச்சார நாகரிகங்களை பாதுகாத்து, தொன்று தொட்டு தனி மனித ஒழுக்கத்துடனும், மனக்கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கையானது, உலக நாடுகளின் பார்வைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து நம் நாட்டை தலைநிமிரச் செய்தது.

அவ்வழி வந்த நம் தலைமுறை, இன்று தடம் மாறி காதலர் தினம் என்ற பெயரில் திருமணத்திற்கு முன்பே மேலை நாட்டு கலாச்சாரத்தினை பின்பற்றி கணவன், மனைவியாக வாழ்ந்து கொண்டு, நம் பாரம்பரிய கலாச்சாரத்தினை சிதைத்து, வருங்கால சந்ததியினர்களுக்கு மோசமான வழிகாட்டியாகவும் திகழ்கின்றனர்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து காதலர்கள் இருந்துள்ளார்கள். அன்றைய காதலர்கள் நம் பண்பாடு, கலாச்சார, நாகரிகங்களை பாதுகாத்து, சமூக இடைவெளி விட்டு கடிதங்களையும், பரிசுப் பொருட்களையும் பரிமாறிக் கொண்டு புனிதத் தன்மையை பாதுகாத்து வாழ்ந்துள்ளனர்.

ஆனால், இதற்கு நேர்மாறாக இன்று, காதலன் தன்னை எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறும் போலி ஆசை வார்த்தைகளை நம்பி, உயிருக்கு இணையான கற்பை காதலி பரிசாக கொடுக்கிறாள். கடைசியில், காதலன் தன்னை திருமணம் செய்யாமல் கைவிட்ட பின், வயிற்றில் வளரும் கருவை அழிக்க சட்டவிரோதமாக மருந்துவமனைக்குச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக சில பெண்கள், கல்நெஞ்சம் கொண்டு குழந்தையை பெற்றபின், அந்தக் குழந்தையை சாக்கடை கால்வாய், முட்செடிகளுக்குள் வீசிச் சென்று விடுகின்றனர்.

ஒரு சிலர் துணிந்து, தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு இவர்தான் தந்தை என நிலைநாட்ட காவல் நிலையம், நீதிமன்றம் மற்றும் காதலனின் வீட்டிற்குச் சென்று போராடுகின்ற செயல்கள், அனைத்தையும் தினசரி நாளிதழ், தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். கரோனா பெருந்தொற்றைத் தடுக்கவும், மனித உயிர்களை பாதுகாக்கவும், சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணியவும், ஊனம் இல்லாத குழந்தைகள் வளர போலியோ சொட்டு மருந்து வழங்கவும், தனிநபர் இல்ல கழிவறை கட்டவும்,

விபத்து இல்லா பயணத்தை ஏற்படுத்தவும், சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கவும் எண்ணற்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வருவதை மனதார வரவேற்கிறேன். அதேபோல், பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தினை நம் பண்பாடு, கலாச்சார நாகரிகங்களை பாதுகாக்கும் தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். காதலர்கள் மத்தியில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க ஏஐ கண்காணிப்பு அமைப்பு தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.