ETV Bharat / state

தேர்தல் பணிகளுக்கான வீடியோ, போட்டோ எடுக்கும் பணி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது - ஒளிப்பதிவாளர்கள் சங்கம் கோரிக்கை! - Trichy District Collector

Recording video of the election works: தேர்தல் பணிகளை வீடியோ எடுக்கும் வேலையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது எனக்கூறி திருச்சியில் உள்ள வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் சங்கம் கோரிக்கை
போட்டோ எடுக்கும் பணி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க கூடாது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 4:25 PM IST

திருச்சி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பணிகளுக்கான வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் வேலையினை கார்ப்பரேட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்காமல், வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் நீண்ட காலமாகச் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. முறையாக அரசாங்க பதிவு செய்யப்பட்டுச் செயல்பட்டு வரும் இந்தச் சங்கத்தில் 1800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆயுட்கால மற்றும் ஆண்டு சந்தா உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், தேர்தலின் போது வீடியோ எடுக்கும் பணியை இந்தச் சங்க உறுப்பினர்களுக்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அச்சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், “இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கு முழுமையாக வீடியோ எடுக்கும் மிக முக்கியமான வேலை உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தோம். அப்படியான மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேலையை மிக நீண்டகாலமாகவும், நிரந்தரமாகவும் இந்தத் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் எங்களைப் போன்ற அரசு பதிவு பெற்ற சங்க உறுப்பினர்களுக்கு வழங்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது தெரிய வந்தது. அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

எங்கள் உறுப்பினர்கள் நிரூபர்களாகவும், வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்களாகவும், பல இன்னல்களுக்கு இடையில் நமது அரசு சார்ந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடுமையான பணியைத் தினமும் இரவு பகல் பாராமல் செய்து கொண்டுள்ளனர். இப்படி அரசு நிர்வாகத்தோடு இணைந்து செயல்படும் எங்களைப் போன்ற புகைப்பட, வீடியோ கலைஞர்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை வழங்கினால் எங்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், மேம்படவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

போட்டோ வீடியோ கிராபர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் பணியை எங்களுக்கு வழங்கிட‌ வேண்டும்” என அந்தச் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை: திருமண பேனர் விவகாரத்தில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய பெண் போலீஸ்.. மணக்கோலத்தில் போராட்டம் நடத்திய ஜோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.