ETV Bharat / state

தமிழகம் முழுவதும் உள்ள ராமோஜி குழும நிறுவனங்களில் ராமோஜி ராவ் நினைவேந்தல் நிகழ்ச்சி - ஊழியர்கள் மலரஞ்சலி - TRIBUTE TO RAMOJI RAO - TRIBUTE TO RAMOJI RAO

TRIBUTE TO RAMOJI RAO: சினிமா, மீடியா உலகின் ஜாம்பவான் ராமோஜி ராவ் மறைந்து 13ம் நாளான இன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள ராமோஜி குழும நிறுவனங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈ நாடு, ஈ.டிவி பாரத், மார்கதர்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ராமோஜி ராவின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் ஊழியர்கள்
ராமோஜி ராவின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் ஊழியர்கள் (CREDIT -ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 8:02 PM IST

சென்னை: பிரபல தொழிலதிபரும், மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத்தின் நிறுவனருமான ராமோஜி ராவ் கடந்த ஜூன் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். 87 வயதான அவர், இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளர் ஆவார்.

அது மட்டுமல்லாது, ஈநாடு பத்திரிகை, ஈடிவி, ஈடிவி பாரத் நெட்வொர்க் போன்ற ஒட்டுமொத்த ராமோஜி குழுமத்தின் தலைவராக இருந்தார். மேலும் சினிமா, சிட்பண்ட் உள்ளிட்ட பல்துறைகளில் சாதனை படைத்தவராக ராமோஜி ராவ் விளங்கினார்.

அதேபோல், பத்திரிகை,இலக்கியம்,கல்வி துறைகளில் இவர் ஆற்றிய செயலுக்காக அவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குநர்கள் ஷங்கர், ராஜமெளலி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமோஜி ராவ் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இறுதி அஞ்சலி நிகழ்வு வரை பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அலுவலகத்தில் அஞ்சலி: இந்நிலையில், ராமோஜி ராவ் மறைந்து 13 ஆம் நாளான இன்று, நாடு முழுவதும் உள்ள ஈநாடு, ஈடிவி, ப்ரியா ப்ராடக்ட்ஸ் மற்றும் மார்கதர்சி நிறுவனங்களில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

அந்த வகையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ஈநாடு, ஈ.டிவி பாரத், மார்க்கதரசி அலுவலக ஊழியர்கள் இணைந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஈநாடு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமோஜியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஊழியர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, நினைவேந்தல் நிகழ்விற்கு பிறகு ராமோஜி குழுமத்தின் ஊழியர்களுக்கு ராமோஜி ராவ் எழுதிய மடல் படித்து காண்பிக்கப்பட்டது, தொடர்ந்து அவரின் வாழ்க்கை வரலாறு படம் திரையிடப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை: இதேபோன்று, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மார்கதரசி அலுவலகத்தில் ராமோஜிராவின் உருவ படத்திற்கு ஊழியர்கள் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ராமோஜி ராவின் வாழ்க்கை வரலாறு அவர் தன்னுடைய ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது.

பின்னர் ஊழியர்கள் அனைவரும் ராமோஜி ராவ் மறைவிற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மார்கதர்சி கோவை அலுவலக மேலாளர் சரவண செல்வம் மறைந்த ராமோஜி ராவின் செயல்பாடுகள், வளர்ச்சி, அவர் மக்களுக்கு செய்த சேவைகளை நினைவு கூர்ந்தார்.இந்நிகழ்வில் மார்கதர்சி ஊழியர்கள், ஈடிவி பாரத் செய்தியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருச்சி: திருச்சி கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையில் இருக்ககூடிய மார்கதர்சி சிட்பண்ட் திருச்சி கிளை அலுவலகத்தில் மேலாளர் சரவணன் பாபு தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிட்பண்ட் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டு ராமோஜி ராவ் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் ராமோஜி குழுமத்தின் ஒரு அங்கமாக இருக்கும் ஈடிவி பாரத் ஊடகத்தின் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட செய்தியாளர் கலந்து கொண்டு ராமோஜி ராவ் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மதுரை: அதன் தொடர்ச்சியாக, மதுரை ஞான ஒளிவுபுரத்தில் அமைந்துள்ள மார்கதர்சி அலுவலகத்தில் அதன் ஊழியர்களும் ஈடிவி பாரத் மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட செய்தியாளர்களும் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மார்கதர்சி சிட் பி லிட் கிளை மேலாளர் ஸ்ரீதர் தலைமையில் அனைத்து பணியாளர்களும் ராமோஜிராவ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். கிளை மேலாளர் ஸ்ரீதர் ராமோஜி ராவின் கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நினைவு கூர்ந்தார். பிறகு பணியாளர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய வியாபாரிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல் - kallakurichi Celebrities reactions

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.