அடுத்த ஸ்டெப் ஐஏஎஸ் தான்.. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதியிடம் பழங்குடியின் மாணவி விருப்பம்! - TRIBAL GIRL ROHINI - TRIBAL GIRL ROHINI
TRIBAL GIRL ROHINI: ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி-யில் சேர்ந்துள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ரோகினியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தினார். அவரிடம் தான் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என விரும்புவதாக ரோகினி கூறியதை தொடர்ந்து அதற்கும் அரசு கண்டிப்பாக உதவி செய்யும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
![அடுத்த ஸ்டெப் ஐஏஎஸ் தான்.. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதியிடம் பழங்குடியின் மாணவி விருப்பம்! - TRIBAL GIRL ROHINI மாணவி ரோகினி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-08-2024/1200-675-22109100-thumbnail-16x9-ten.jpg?imwidth=3840)
![ETV Bharat Tamil Nadu Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Aug 2, 2024, 12:25 PM IST
திருச்சி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஶ்ரீரங்கம் தொகுதி அல்லூர் ஊராட்சி பாரதி துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் காலை உணவு அருந்தினார்.
திருச்சி மாவட்டம் பச்சைமலை சின்ன இலுப்பூர் மலைகிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில் படித்த தங்கை ரோகிணி, JEE நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று, புகழ்பெற்ற திருச்சி NIT கல்லூரியில் பொறியியல் படிக்கவுள்ளார்.
— Udhay (@Udhaystalin) August 1, 2024
தன்னம்பிக்கையோடும் – லட்சியத்தை எட்ட வேண்டும் என்ற வேட்கையோடும்,… pic.twitter.com/RdmVxWZ6rv
இதனை தொடர்ந்து துறையூர் அருகே உள்ள பச்சைமலையில் தென்புற நாடு பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் பச்சை மலையில் அமைந்துள்ள சின்ன இலுப்பூர் கிராமத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு ஜே.இ.இ (JEE) தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி-யில் (Trichy NIT) சேர்ந்துள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ரோகினியை அவர் வீட்டில் சந்தித்தார்.
தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை கூறி சிறிது நேரம் கலந்துரையாடினார். அந்த மாணவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேநீர் வழங்கினார். தொடர்ந்து ரோகினி குடும்பம் விவசாயம் செய்ய ஏதுவாக டிராக்டர் ஒன்றையும் அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து ரோகிணி இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு மின் வசதிக்கான சேவையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ் சிவசங்கர், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் தங்கள் இல்லம் தேடி வந்து தன்னை சந்தித்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மாணவி ரோகினி தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் தன்னிடம் கல்வி குறித்து கலந்துரையாடினார். என்னவாக விருப்பம் என என்னிடம் கேட்டார். அதற்கு நான் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என கூறினேன். அதற்கும் வாழ்த்து தெரிவித்தார். நன்றாக படிக்க வேண்டும் அரசு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என கூறியதாக மாணவி ரோகினி தெரிவித்தார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-08-2024/22109100_whatsapp.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்