ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர் பணியிட தேர்வு: 2,768 இடங்களுக்கு எத்தனை பேர் போட்டி தெரியுமா? - trb exam - TRB EXAM

தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் மேலும் கூடுதலாக ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு இன்று (ஜுலை 21) நடைபெறுகிறது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு (Image Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 11:30 AM IST

Updated : Jul 21, 2024, 12:12 PM IST

சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மொத்தம் 26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு (OMR BASED) கொள்குறி வகை முறையில் இன்று (ஜூலை 21) நடைபெறுகிறது. தகுதித் தேர்வு ஒன்றில் (தமிழ் மொழி தாள் தேர்வு) 50 மதிப்பெண்களுக்கு 30 கேள்விகள் கேட்கப்படும். அதில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களின் இரண்டாம் தகுதித் தேர்வுக்கான விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும்.

இடைநிலை ஆசிரியர் பணியிட தேர்வில் பங்கேற்றவர்கள் (Image Credit - ETV Bharat Tamilnadu)

பகுதி இரண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா ,உருது, ஆங்கிலம் ,கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட குறிப்பிட்ட ஐந்து மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்று, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை சேர்த்து மொத்தம் ஐந்து பாடங்களிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்படும்.

மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது சிறுபான்மை மொழியில் ஏதாவது ஒன்றினை அவர்கள் பகுதி இரண்டு தேர்வுக்கு தெரிவு செய்து கொள்ளலாம். வினாத்தாளில் மொழிப் பாடத்திற்கான தேர்வுகள் அந்தந்த மொழிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கான வினாக்கள் ஆங்கிலத்திலும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

போட்டி தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் ஆண்டுகளுக்கேற்ப அரசால் வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்துத் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுத் தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.

சென்னையில் 5 மையங்களில் நடைபெறும் தேர்வில் மொத்தம் 1292 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:Simulation முறையில் மருத்துவ பயிற்சி.. சென்னையில் மருத்துவ ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம்!

Last Updated : Jul 21, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.