ETV Bharat / state

ராஜபாளையத்தில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்! - Rajapalayam Railway station - RAJAPALAYAM RAILWAY STATION

Rajapalayam: மின்மய ரயில் பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, விருதுநகர் - தென்காசி ரயில் பிரிவுக்குட்பட்ட ராஜபாளையம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் மின்தடை பராமரிப்பு பணிமனை துவக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 9:43 PM IST

மதுரை: விருதுநகர் - தென்காசி ரயில் பிரிவில் மின்மய மின் தட ரயில் பாதையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும் ராஜபாளையத்தில் ஒரு பணிமனை 1.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பணிமனை கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 24) துவக்கி வைக்கப்பட்டது. இது மதுரை கோட்டத்தில் 12வது பணிமனையாகும். இந்த பணிமனையில் ரயில் பாதையில் இயங்கும் வகையிலான பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று தயார் நிலையில் உள்ளது.

இந்த ரயில் பெட்டி மூலம் நடுவழியில் ஏற்படும் திடீர் மின்தடை பழுதுகளை எளிதாக சரி செய்ய முடியும். பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ரயில்களை தங்கு தடை இன்றி குறித்த காலத்தில் இயக்க முடியும். இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை இருபுறமிருந்தும் இயக்கலாம். இந்த ரயில் பெட்டி சிறிய பராமரிப்பு பணிமனை போல அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், இருபுறமும் ரயில் ஓட்டுநர் அறைகள், ஜெனரேட்டர், பராமரிப்பு தளவாட சாமான்கள் வைக்கும் பகுதி, நடுப்பகுதியில் மின்சார வயர்களை ஊழியர்கள் ஆய்வு செய்ய மேலே செல்லும் வகையிலான ஹைட்ராலிக் ஏணி, ஊழியர்கள் அமரும் பகுதி ஆகியவை உள்ளன. ஹைட்ராலிக் ஏணி சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஹைட்ராலிக் ஏணியில் உள்ளது.

மேலும், மழைக் காலங்களில் மரங்கள் விழுவது இயல்பான ஒன்று. அவை 25,000 வாட்ஸ் மின்சாரம் பாயும் ரயில் மின்தடத்தில் விழும்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இது மாதிரியான சூழ்நிலையில், சம்பவ இடத்திற்கு உடனடியாக இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை அனுப்பி, பாதிக்கப்பட்ட மின்தடத்தை சரி செய்ய முடியும்.

ரயில் மின்தடத்தில் மரம் விழுந்தால், துண்டிக்கப்பட்ட மின் பாதையில் இருந்து 2 மீட்டர் தூரத்திற்கு மின்சார தாக்கம் இருக்கும். எனவே, பொதுமக்கள் அபாயத்தை விளைவிக்கும் பாதிக்கப்பட்ட மின் பாதை அருகில் செல்லாமல், அருகிலுள்ள ரயில்வே கேட் அல்லது ரயில் நிலையத்தில் உள்ள ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதேநேரம், பராமரிப்பு மற்றும் அவசர பணிகளுக்காக மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாசரேத், ராஜபாளையம், புனலூர் மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் 15 பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, காரைக்குடி, ராஜபாளையம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு பராமரிப்பு ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ரயில் பயணச் சீட்டு விற்பனை: பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! - TRAIN UNRESERVED TICKET

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.