சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேச கமாடிட்டி சந்தையை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன்வைத்துத் தான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாடு உள்படத் தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்குத் தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
இது போன்ற சூழ்நிலையில் கடந்த சில நாள்களவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மார்ச் 06) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,040க்கும் மற்றும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,320க்கும் விற்பனையானது.
அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று(மார்ச் 07) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கும், ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்து ரூ.6,090-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியைப் பொறுத்த வரையில் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.78.50-க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1220 உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க:சென்னை எம்ஐடி-க்கு வெடிகுண்டு மிரட்டல்.. அடுத்தடுத்து வரும் மிரட்டல்களால் பொதுமக்கள் அச்சம்!