ETV Bharat / state

ரமலான் பண்டிகை; 1,145 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்! - Ramzan special buses

TNSTC: ரமலான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் 1,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

TNSTC
TNSTC
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 8:09 PM IST

சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என அதன் மேலாண் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்.10, 12 மற்றும் 13 ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்.10ஆம் தேதியன்று 315 பேருந்துகளும், ஏப்.12 ஆம் தேதியன்று 290 பேருந்துகளும், ஏப்.13ஆம் தேதியன்று 340 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப்.10,12,13 ஆகிய தேதிகளில் 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக ஏப்.10ஆம் தேதியன்று 315 பேருந்துகளும், ஏப்.12ஆம் தேதியன்று 290 பேருந்துகளும், ஏப்.13ஆம் தேதியன்று 340 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

கோயம்பேடு: கோயம்பேட்டிலிருந்து ஏப்.10ஆம் தேதியன்று 40 பேருந்துகளும், ஏப்.12ஆம் தேதியன்று 40 பேருந்துகளும், ஏப்.13ஆம் தேதியன்று 40 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும், பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு: இந்நிலையில், இந்த வாரத்தில் புதன்கிழமையன்று 7,878 பயணிகளும், வெள்ளிக்கிழமையன்று 6,610 பயணிகளும், சனிக்கிழமை 4,143 பயணிகளும் மற்றும் ஞாயிறன்று 11,375 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: மே மாதத்தில் மத்திய அரசின் கேபினட் செயலாளர் ஆலோசனைக் கூட்டம்? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.