ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு: வெளியான முக்கிய அப்டேட்! - TNPSC GROUP 4 EXAM LATEST UPDATE - TNPSC GROUP 4 EXAM LATEST UPDATE

TNPSC Hall Ticket download: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுவதற்கான ஹால்டிக்கெட்டை தமது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்  -கோப்புப்படம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம் -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 6:53 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 (TNPSC Group-4) தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி- IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை (OMR முறை) தேர்வு ஜூன் 9ஆம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மையங்களில் குலுக்கல் முறையில் பணி: சென்னை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.