ETV Bharat / state

குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்கள் அதிகரிப்பா? டி.என்.பி.எஸ்.சி விளக்கம்! - TNPSC

குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு காலிப்பணியிடங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி  எம்பலம் மற்றும் தலைமை அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி எம்பலம் மற்றும் தலைமை அலுவலகம் (Credit - TNPSC X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 5:15 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர் , இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர் , ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர் , தொழிற்சாலை மூத்த உதவியாளர் , வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. 6,244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது.

இந்தநிலையில் மேலும் இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி கூடுதலாக 2,208 பணியிடங்களை சேர்த்து அறிவித்துள்ளது. ஆனாலும் மேலும் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணை வெளியீடு!

டி.என்.பி.எஸ்.சி விளக்கம்: இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவலில், "ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு குருப் 4 ல் , 2024 இல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா? 2022 இல் நடைபெற்ற குருப் 4 தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10, 139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2024 இல் நடைபெற்ற குருப் 4 தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே 2024 ம் ஆண்டு குருப் 4 தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன. எனவே சமூக வலைத்தளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.