ETV Bharat / state

2,327 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ அறிவிப்பு வெளியீடு! - TNPSC Group 2 Exam

TNPSC Group 2 Exam Notification: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 2:30 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வாளர்கள் இன்று(ஜூன் 20) தொடங்கி வரும் ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்துவதற்கும் ஜூலை 19ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.

2327 காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் கீழ் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்படவுள்ளன. அதன்படி மொத்தம் 2327 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாகத் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏதாவதொடு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிக்க வேண்டும். மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகப் படித்து இருக்க வேண்டும்.

தேர்வு முறை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ பனிகளுக்கு பொதுவான முதல்நிலை தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பொறுப்பவர்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான தனித்தனியான முதன்மை தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி? TNPSC குரூப் 2 மற்றும் குரூப்-2A தேர்வுகளை எழுத இணையத்தில் விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு முறை பதிவு செய்த பிறகு (One Time Registation) தொடர்ந்து முதல்நிலை மற்றும் பிரதான தேர்வுகளுக்கு முறையே ரூ.150, ரூ.100 மற்றும் ரூ.150 செலுத்த வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் கட்டண தொகையை காலக்கெடுவிற்குள் செலுத்த வேண்டும்.

கடந்த 9-ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடந்து முடிந்த நிலையில் இன்று குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யு.ஜி.சி நெட் 2024 தேர்வு ரத்து...காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.