ETV Bharat / state

திடீரென உயர்ந்த மின் கட்டணம்.. தனியார்மயத்தை நோக்கிய பயணத்திற்கு அடித்தளம்.. மின் ஊழியர் அமைப்பு கூறுவது என்ன? - TNEB Tariff HIKE - TNEB TARIFF HIKE

TNEB: தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை நேற்று உயர்த்தி அறிவித்த நிலையில், அதற்கான காரணம் மற்றும் தமிழக மின் உற்பத்தி திறன், மின்சார வாரியத்தில் தனியார் நுழைவது பற்றி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

மின் மீட்டர்
மின் மீட்டர் (Credits - TANGEDCO X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 9:42 PM IST

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மின் கட்டணத்தை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தி நேற்று அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது என்றால் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளது என்பது தான் பொருள்.

மத்திய அரசு நிர்பந்தம்: மின்சாரக் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிர்பந்தம் கொடுத்திருந்தது. அவ்வாறு உயர்த்தினால் தான் புதிய திட்டங்களுக்கு அனுமதியும், மானியங்களும் வழங்கப்படும் என்றும் நிர்பந்தம் இருந்தது.

அதனால் தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2026 - 27ஆம் ஆண்டு வரையில் மின் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும் என்று உத்தரவு போட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாது. தமிழக அரசு மின்சார வாரியம் மூலமாக மனு போட்ட பின்னர் அதனை பரிசீலித்த பின்னர் தான் அறிவிக்கும் என்பது தான் வழக்கம்.

மின்சார கட்டணம்: மின்சார கட்டணம் நிர்ணயம் செய்யும் போது, நடப்பாண்டிற்கான ஏப்ரல் மாதம் மற்றும் கடந்தாண்டிற்கான ஏப்ரல் மாதம் இவை இரண்டிற்கும் இடையே உள்ள மின்நுகர்வு பயன்பாடு மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிட்டு மின் கட்டண உயர்வை 6 சதவீதமோ அல்லது பண வீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதில் உள்ள குறைந்த தொகையை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்தாண்டு 4.17 சதவீதம் உயர்த்த வேண்டிய மின் கட்டணத்தை 2.18 சதவீதம் தான் உயர்த்துகிறோம் என அரசு தெரிவித்தது. ஆனால் இந்தாண்டு 4.83 சதவீதம் அடிப்படையிலேயே கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் கொள்முதல்: மின்சார வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் தான் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் மின்சாரம் கொள்முதல் மிக அதிகமாக இருந்திருக்கிறது. ரூ.50 ஆயிரம் கோடிக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளனர்.

மின் உற்பத்திக்கு மின்சார வாரியம் செலவிடும் தொகை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், மின்சாரம் வெளியில் இருந்து கொள்முதல் செய்யும் போது அதற்கான செலவுகள் தான் அதிகமாக இருக்கிறது. இதனால் தான் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை என்பது வருகிறது.

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி: தமிழ்நாட்டில் 34 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திறன் உள்ளது. ஆனால், செயல்பாட்டில் 12 - 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செயப்படுகிறது. கோடை காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டாக தேவை அதிகரிக்கிறது.

அதனை ஈடுகட்டுவதற்கு 6 ஆயிரம் மெகாவாட் வெளியில் வாங்கினால் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துகின்ற நிலை வரும் பொழுது, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6-லஇல் இருந்து 12 ரூபாய் வரை உயர்த்தி தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் வருகிறது.

மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்ட தொகையை விட கூடுதல் தொகை வந்தால் அரசு மானியம் கொடுத்து அந்த உற்பத்தி நிலையங்களை வேகமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், நிச்சயமாக ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் கோடிக்கு மின்சாரத்தை வாங்குவதை தவிர்க்க முடியும். மின்சார வாரியம் லாபத்தை நோக்கிச் செல்லும்.

மின்சார வாரிய கம்பெனி: தமிழ்நாடு மின்சார வாரியம் அரசினுடைய பொதுத் துறையாக இருந்தது. மத்திய அரசின் மின்சார சட்டம் 2003 அடிப்படையில், எல்லா மாநில மின்வாரியங்களையும் கம்பெனிகளாக பிரிக்க வேண்டும் என கூறிய போது தமிழ்நாடு அரசு பிரிக்காமல் இருந்தது. ஆனால், கடந்த 2008ஆம் ஆண்டு அரசாணை மூலமாக தமிழ்நாடு மின்சார வாரியம் என இருந்ததை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் என பிரித்தனர்.

மின்சார வாரியத்தில் தனியார்: திமுக அரசு தற்போது இரு கம்பெனிகளை மேலும் உடைத்து மின் உற்பத்தி கம்பெனி, விநியோக கம்பெனி, கிரின் எனர்ஜி கம்பெனி என மாற்றி உள்ளது. இது தனியார் மெல்ல மெல்ல இந்த துறையில் உள்ளே வருவதற்கான அனைத்து வழிகளையும் நிச்சயமாக செய்யும். தனியாரை எதிர்காலத்தில் நம்பி இருக்க வேண்டிய நிலை தான் மின்சார வாரியத்தை பிரித்ததால் ஏற்படும்.

பிரித்த மாநிலங்கள் ஒருகிணைத்து இருக்கின்றனர். அதனை தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பிரிப்பதற்கான உத்தரவு வழங்குவது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எதிர்த்து தொழிற்சங்கம் போராடி வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மின் கட்டணம் உயர்வு; இவர்களுக்கெல்லாம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை - மின்சார வாரியம் கூறிய பதில்! - TNEB Explains EB Bill Tariff Hike

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.