ETV Bharat / state

ஜூன் 23ல் இடைநிலை ஆசிரியர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டம்! - TRB SGT EXAM DATE 2024 - TRB SGT EXAM DATE 2024

TRB SGT EXAM DATE 2024: தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிவதற்காக 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 23ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TRB SGT EXAM DATE 2024
TRB SGT EXAM DATE 2024
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 7:36 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த பணிக்கான போட்டித் தேர்வு எழுத மார்ச் 20ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில், இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுத் தாள் ஒன்றில் தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மேலும், இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு (OMR BASED) கொள் குறி வகை முறையில் ஜூன் 23 ந் தேதி நடைபெறுகிறது. தமிழ் , உருது, தெலுங்கு, கன்னடா,மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களுக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. தமிழ் மொழி தேர்வில் தகுதி பெற வேண்டும். தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்ததாள் திருத்தப்படும்.

போட்டி எழுத்துத் தேர்வில் தகுதி ஒன்றில் தமிழ் மொழி தாள் தேர்வில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். அதில் தேர்வர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். பகுதி 2 ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா ,உருது, ஆங்கிலம் ,கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஐந்து பாடங்களிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்பட உள்ளது.

மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது சிறுபான்மை மொழியில் ஏதாவது ஒன்றினை அவர்கள் பகுதி இரண்டு தேர்வு செய்து கொள்ளலாம். வினாத்தாளில் மொழிப் பாடத்திற்கான தேர்வுகள் அந்தந்த மொழிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கான வினாக்கள் ஆங்கிலத்திலும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும். போட்டி தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப அரசால் வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்துத் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.

அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுத் தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் பணி நியமனங்கள் வழங்கப்படும். இந்தத் தேர்விற்கான பாடத்திட்டமும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in/syllabus1.php?language=LG-1&status=Active என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியீடு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு! - TRB EXAM RESULTS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.