ETV Bharat / state

இதாங்க இப்போ ட்ரெண்ட்.. ஜப்பான் பெண்ணை மணந்த தூத்துக்குடி இளைஞர்! - TN Man married Japan woman

திருவள்ளூரில், தூத்துக்குடி இளைஞருக்கு ஜப்பான் பெண்ணுடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

ஜப்பான் பெண்ணை மணந்த தூத்துக்குடி இளைஞர்
ஜப்பான் பெண்ணை மணந்த தூத்துக்குடி இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 8:09 AM IST

திருவள்ளூர்: துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் குடும்பத்துடன் தங்கி மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராஜகனி என்ற மனைவியும், ஒரு மகனும் மற்றும் இரு மகள்களும் உள்ளனர்.

மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் ராஜேஷ் பொறியியல் பட்டம் பெற்று ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் கடந்த நான்காண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியூகி என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இதையும் படிங்க: சீனப் பெண்ணை தமிழர் முறைப்படி கரம்பிடித்த தேனி மாப்பிள்ளை!

இதையடுத்து பெற்றோர் ஆசியோடு, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், நேற்று இவர்களது திருமணம் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமழிசையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த திருமணத்தில் திருமழிசை, துாத்துக்குடி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.