ETV Bharat / state

தஞ்சை சரபேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் மீது ஊழல் புகார்.. சிவசேனா குற்றச்சாட்டு! - Corruption complaint on Temple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 5:24 PM IST

Corruption Petition on Temple administration: தஞ்சாவூர் திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரர் திருக்கோயிலின் சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம், தமிழக ஆலய பாதுகாப்பு தலைவர் இராம நிரஞ்சன் மற்றும் சிவசேனா மாநில துணைத் தலைவர் ஆனந்த் புகார் மனு அளித்துள்ளனர்.

பூக்கடை ஆனந்த், இராம நிரஞ்சன்
பூக்கடை ஆனந்த், இராம நிரஞ்சன் (Credits- ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில் சரபேஸ்வரர் ஸ்தலமாக அமைந்துள்ள ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத கம்பகரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் 3ஆம் குலோத்துங்கச் சோழ மன்னரால் கட்டப்பட்டது. இந்நிலையில், தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தரிசனம் செய்தார்.

இராம நிரஞ்சன் செய்தியாளர் சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் இராம நிரஞ்சன் மற்றும் சிவசேனா மாநில துணைத் தலைவர் பூக்கடை ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த கோயில் நிர்வாகம் மேல் ஊழல் புகார்களை அடுக்கிய மனு ஒன்றை இன்று தமிழக முதல்வர், தருமபுர குருமகா சன்னிதானம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோருக்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா வாயிலாக, நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், ‘சரபேஸ்வரர் திருக்கோயிலில் நாள்தோறும் முறையான 6 கால பூஜைகளுக்குப் பதிலாக 4 கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகிறது. ஆனால், பரிகார ஹோமங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை வசூல் செய்யப்படும் நிலையில், இதற்கு திருக்கோயில் சார்பில் ரூபாய் 6 ஆயிரம் மட்டும் ரசீது வழங்கப்படுகிறது.

மேலும், சுவாமி நெய்வேத்தியத்திற்கு கோயில் மடப்பள்ளியில் பிரசாதங்கள் தயார் செய்யப்படாமல் வெளியே தனியார் உணவகத்தில் தயார் செய்யப்படும் நெய்வேத்தியம் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாள்தோறும் செய்யப்படும் அபிஷேகங்கள் முழுமையாகச் செய்யாமல், 16 விதமான சோடச உபசாரங்கள், கோபுர ஆர்த்தி காட்டாமலேயே பூஜைகள் நடைபெறுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்து.

மேலும், இதுகுறித்து பேசிய அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் இராம நிரஞ்சன், “கோயிலில் நடைபெறும் பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஹோமங்களுக்கான கட்டண விவரங்கள் குறித்த விளம்பரப் பலகை வைத்திட வேண்டியும், இக்கோயிலுக்கான குளம் இருக்கிறதா அல்லது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தைச் சரிசெய்ய வேண்டும்.

ஏனென்றால், இக்கோயிலின் பிரதான குருக்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி, முறைகேடாக கோயில் சொத்தை தனது குடும்பத்தினருக்குப் பெயர் மாற்றம் செய்து அபகரித்துள்ளார். மேலும், இதை வைத்துதான் தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டியுள்ளார்.

எனவே, இது குறித்து தமிழக அரசு, ஊழல் தடுப்புத் துறையினர் மூலம் உரிய விசாரணை நடத்தி, உடனடியாக அபகரிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும். அதுமட்டுமின்றி, இக்கோயிலுக்கு என ஒரு பிரத்யோக நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தரக்கோரி இந்த மனுத் தாக்கல் செய்துள்ளதாக” கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தொழில்நுட்பம் அறியதாவர்களுக்கே இந்த திட்டம்.. அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.