ETV Bharat / state

"ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு கொள்கை கோட்பாட்டை பேசக்கூடாது" - சீமான் தாக்கு! - NTK SEEMAN - NTK SEEMAN

Ramachandra Adithanar : அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ஜெயலலிதாவை பற்றி பேச என்ன தகுதி உள்ளது எனவும். அவர் கடுமையான நடவடிக்கையை சந்திப்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

SEEMAN,MLA JAYAKUMAR,THIRUMAVALAVAN
SEEMAN,MLA JAYAKUMAR,THIRUMAVALAVAN (Credit -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 10:09 PM IST

சென்னை: ஆதித்தனாரின் மூத்த மகன் ராமச்சந்திர ஆதித்தனாரின் 90 வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னையில் அவரது திருவுருவ படத்திற்கு திருமாவளவன், ஜெயக்குமார், சீமான்,செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், "ஆதித்தனார் அவர்கள் ஊடகத்துறையில் ஆற்றிய பங்களிப்பை போன்றே, சமூகம் மற்றும் அரசியல் தலைமை உள்ளிட்ட பணிகளிலும் குறிப்பாக ஈழத் தமிழரின் நலனில் மிகுந்த அக்கறை காட்டியவர்.

அதானி ஊழல் முறைகேடு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் அதானி போன்றோர் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு அவர்களின் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எஸ்சி.,எஸ்டி மக்களை மாநில வாரியாக பல்வேறு குழுக்களாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அதிகாரம் அளிக்கக்கூடிய தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது நல்ல எண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாக தெரியவில்லை.

பட்டியல் சமூகத்தினரை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. எஸ்சி எஸ்டி சமூகத்தினர் ஒரே தொகுப்புக்களாக உள்ளார்கள். அதில் கணிசமாக மக்கள்தொகை கொண்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அவசியம் என்பதை திமுக தலைவராக இருந்த கலைஞர் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினர். அதில் விசிக சார்பில் பங்கேற்று அந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தோம். அதன் அடிப்படையில் அருந்ததியினர் சமூகத்தினருக்கு மூன்று சதவீதம் இடஒதுக்கீட்டை திமுக வழங்கியது.

விசிக ஆர்ப்பாட்டம்: இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பது மூன்று அல்லது நான்கு குழுக்களாக பிரித்து அந்த மாநிலங்களில் இருக்கின்ற இடஒதுக்கீட்டை பங்கு போட்டு தர வேண்டும், அவர்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உள்ளனர். உள் ஒதுக்கீடு என்பது வேறு; ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பிளவுபடுத்துவது என்பது வேறு. அதை எதிர்த்து வருகின்ற 14 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அவருடைய கொலைக்கு காரணமானவர்கள், தூண்டி விட்டவர்கள் திட்டமிட்டவர்கள், பண உதவி செய்தவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர் படுகொலையை வைத்து அரசியல் காய்களை நகர்த்துவதை விசிக விருப்பமில்லை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் உடைமைகள் அனைத்தையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,"ஃபார்முலா 4 கார் பந்தயம் நிச்சயமாக நடக்கக்கூடாது. நாட்டில் சட்டம் ஒழுங்கு, கஞ்சா, போதை, விலை ஏற்றம், விலைவாசி ஏற்றம், மின்கட்டண உயர்வு ,சொத்து வரி உயர்வு என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. தமிழ்நாடு பல பிரச்சனைகளால் தீப்பற்றி எரியும்போது ஃபார்முலா கார் ரேஸ் அவசியமா? எந்த விதத்திலும் இந்த பந்தயம் நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம்.

தா.மோ.அன்பரசன் மீது நடவடிக்கை?: பெரும்பான்மை உள்ளதால் யாரை வேண்டுமானாலும் துணை மந்திரி ஆக்கிக் கொள்ளலாமா? மந்திரி என்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா? மந்திரி ஆகுவதற்கு குறைந்தபட்ச தகுதியே அடாவடித்தனம், அராஜகம், அட்டூழியம், கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து இதுபோன்ற தகுதி இருந்தால் தான் மந்திரி என்று ஆகிவிட்டது.

அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ஜெயலலிதாவை பற்றி பேச என்ன தகுதி உள்ளது? கருணாநிதிக்கு கொத்தடிமையாக இருந்துவிட்டு ஸ்டாலினுக்கு கொத்தடிமையாக இருந்து தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு கொத்தடிமையாக இருந்து வருங்காலத்தில் இன்பநிதிக்கு கொத்தடிமையாக இருப்பார். அடிப்படை தகுதியில்லாதவர் அமைச்சராக இருக்கிறார். என்ன உரிமை இருக்கிறது எங்கள் அம்மாவை பற்றி பேசுவதற்கு? நாகரிகமற்ற அரசியல்வாதி. கடுமையான நடவடிக்கையை அமைச்சர் தா.மோ அன்பரசன் சந்திப்பார்" என்றார்.

அதனை தொடர்ந்து, செய்தியாளரை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அமைச்சர் அன்பரசன், 'நடிகர்களுக்கு அரசியல் அறிவு கிடையாது' என்று தெரிவித்த கருத்து குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு, "கட்டமைப்பு இல்லாதவர்கள் குறித்து கவலை என்ன?, அவர் விஜய் பற்றி தான் சொல்ல வேண்டும் என்று அவசியம் என்ன இருக்கிறது?, உதயநிதி பற்றி கூட சொல்லி இருக்கலாம்.

அப்படி என்றால் சரத்குமார், குஷ்பூ, நெப்போலியன் உள்ளிட்டவர்களை எல்லாம் ஏன் சேர்த்துக் கொண்டீர்கள். அறிவாலயத்திற்கு வந்தால் தான் அறிவு வந்துவிடுமே?" என்று சீமான் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுகவை அழிக்க ஒருவர்கூட பிறக்கவில்லை என்று சொல்கிறீர்கள். பிறக்காத எதிரிகளை கண்டு ஏன் பயப்படுகிறார்கள்?

கூட்டத்துக்கு காசு?: ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு கொள்கை கோட்பாட்டை பேசக்கூடாது. அது அங்கேயே செத்துவிட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா கூட இறுதி காலங்களில் காசு கொடுத்துதான் கூட்டத்தை கூட்டினார்கள். எனக்கு விழுந்த 36 லட்சம் வாக்குகளில் குறைந்தது 25 லட்சம் வாக்குகள் திமுகவில் இருந்து தான் விழுந்துள்ளது. விஜய் நடத்தவிருக்கும் மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை. எனக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது" என்று சீமான் கூறினார்.

இதையும் படிங்க: திமுக தலைமைக்கு கட்டுப்படாத கவுன்சிலர்கள்.. சவால்களை சமாளிப்பாரா நெல்லையின் சைக்கிள் மேயர்? - Tirunelveli Mayor Ramakrishnan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.