சென்னை: 'கல்வியில் பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு தருவதாகவும், சிறப்பாக செயல்படும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதியை தர மறுப்பதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிலளித்திருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் தாய் மொழியில் கல்வி கற்பதை முதலமைச்சர் விரும்பவில்லையா?' எனவும் கேள்விகளை முன் வைத்திருந்தார்.
With due respect, for the kind attention of Hon'ble Minister @dpradhanbjp:
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 10, 2024
Tamil Nadu has always been committed to preserving its linguistic heritage through the two-language policy, rooted in historical movements of the 1930s and 60s. We embrace Tamil as a pillar of our… https://t.co/SeRx108Mfo
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், 'மொழி பாரம்பரியத்தை காத்திடும் வகையில் இரு மொழி கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் தமிழ் எங்களின் அடையாளம் என்றும், எதிர்கால தலைமுறையினருக்கு ஆங்கிலத்தை கற்பிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழில் கற்பதையும் ஆங்கில அறிவை போதிப்பதையும் தமிழகம் உறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மத்திய அரசு பணிகளில் சமவாய்ப்பை உறுதிப்படுத்திடும் வகையில் போட்டி தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என பலமுறை முதலமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அதுகுறித்து மத்திய அரசு செவி சாய்க்கவில்லை' என்று தமது பதிவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லையா? முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்!
தமிழ் மொழியில் மாணவர்கள் பாடங்களை பயில்வதில் அரசுக்கு விருப்பம் இல்லையா என்கிற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள அன்பில் மகேஷ் ,'பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பாடங்களை ஏற்கெனவே தமிழ் மொழியில் தமிழகம் மொழிபெயர்த்து வழங்கி வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்
'எண்ணும் எழுத்தும், புதுமைப்பெண், இல்லம் தேடிக் கல்வி, தமிழ் புதல்வன் ஆகிய புதிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப்போகும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எதிர்ப்பு மும்மொழி கொள்கைக்கும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றம் ஆகியவற்றை மட்டுமே தமிழகம் எதிர்கிறது.
மேலும் சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியை விடுவிக்காமல் இருப்பது கல்வியின் மீது மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை நசுக்கும் செயல். எனவே நிறுத்தப்பட்டுள்ள சமக்கிரா சிக்க்ஷா நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தமது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.