ETV Bharat / state

விஜயின் அரசியல் பயணத்தால் யாருக்கு பாதிப்பு?-அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தியின் கணிப்பு இதுதான்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பாதிப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தி கூறியுள்ளார்.

தவெக கொடி, விஜய்
தவெக கொடி, விஜய் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 2:18 PM IST

ஹைதராபாத்: நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பிரபு, அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விஜயின் அரசியல் பயணம் குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உண்டு. எனது தந்தை ஆசியும் எனது ஆதரவும் அவருக்கும் உண்டு. ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன். விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உள்ளது என்றுதான சொல்ல வேண்டும் விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது,"என்றார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பாதிப்பு: மருது சகோதரர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி, "நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி மானாடு நடத்துவதற்கு பாராட்டுகள். எக்காலத்திலும் அவர் முடிவில் இருந்து பின்வாங்கி விட வேண்டாம். நடிகர் விஜய் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதற்காக வருகிறார். அந்த மாறுதல் உங்களால் வரட்டும். விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாறுதல் வேறு மாதிரி இருந்திருக்கும்.

அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தி
அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தி (Credit - ETV Bharat Tamil Nadu)

நடிகர் விஜயினால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் பாதிப்பு வரும். அதிமுக ஓட்டு விஜய்க்கு சென்று விடும், புதிய வரவுகளால் அதிமுகவிற்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும். நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறினாலும் நான் இருக்கும் கட்சியில் இருந்து பிரிந்து வரமாட்டேன். மாநாட்டில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோருக்கு பெரிய கட்அவுட் வைத்ததற்கு பாராட்டுகள். விஜயின் கோட்பாடுகள் பெரியாரின் கோட்பாடுகளாக இருக்க வேண்டும்," என்றார்.

வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்தியில், "தலைவர்களின் கட்அவுட்களை வைத்து உறுதியான இலட்சிய அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். தவெகவின் மாநாடு வெற்றி பெற வேண்டும் என சகோதரர் விஜயை வாழ்த்தி வரவேற்கின்றேன்,"என்று கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.