ETV Bharat / state

ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு பதிலளிக்காத தாசில்தார்: ரூ.10 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவு! - 10 thousand fine for Tahsildar - 10 THOUSAND FINE FOR TAHSILDAR

Tamil Nadu Information Commission: ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு 1,550 நாட்களாக பதில் அளிக்காமல் அலைக்கழித்த வட்டாட்சியர். பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர் என்ஜி மோகன்
முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர் என்ஜி மோகன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 10:54 PM IST

மதுரை: மதுரை சத்ய சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர் என்ஜி மோகன். இவர் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட, மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடந்த 2019-ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

போக்குவரத்து துறை ஊழியர் என்ஜி மோகன் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில் சுமார் 4 வருடங்கள் மேலாகியும் வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பதில் அளிக்காததால் மேல்முறையீடு செய்திருக்கிறார். மேல்முறையீடு செய்தும் முறையாக பதில் அளிக்காமல் இருந்ததால், சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஆணையம், வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பதில் அளிக்காமல் இவர் அலைக்கழிக்கப்பட்டதை உறுதி செய்தது. அதனை தொடர்ந்து, போடி நாயக்கனூர் வட்டாட்சியர் மணிமாறன் ரூ. 10 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து வட்டாட்சியர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ரூ. 10 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை மோகனுக்கு தபால் மூலம் அனுப்பட்டுள்ளது. மேலும், மோகனுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை அறியாத சில அதிகாரிகள், இதுபோன்று நடந்து கொள்வதால் தகவல் ஆணையம் தலையிட்டு விண்ணப்பதாரருக்கு முறையாக இழப்பீடு மற்றும் தகவலை பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுகுறித்து போக்குவரத்து துறை ஊழியர் என்ஜி மோகன் கூறுகையில், “ பல்வேறு தகவல் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பினேன். வட்டாட்சியர் பதில் அளிக்காதததால் இரண்டு முறை மேல்முறையீடு செய்தேன். இதனையடுத்து, தகவல் ஆணையத்திற்கு நினைவூட்டும் கடிதம் எழுதினேன். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

அதில், எனக்கு உரிய தகவலை முழுமையாக தரவும், எனது மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த தகவல்கள் மற்றும் பணம் வந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த தகவல் ஆணையத்திற்கு நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: டின்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு: வெளியான முக்கிய அப்டேட்! - TNPSC GROUP 4 EXAM LATEST UPDATE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.