ETV Bharat / state

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? அமைச்சர் மா சுப்பிரமணியன் வலியுறுத்துவது என்ன? - FIRE CRACKERS ACCIDENT PRECAUTION

பட்டு, நைலான் மற்றும் நீளமான உடைகளை அணிந்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க கூடாது என நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். பட்டாசுகளை வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்...

பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி (Credit - Ma subramanian X page)
author img

By ETV Bharat Health Team

Published : Oct 28, 2024, 4:50 PM IST

சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீபாவளிக்காக 25 படுக்கைகளை கொண்ட 'தீபாவளி தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவை' மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திங்கட்கிழமை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கி வைப்பது என்பது வழக்கம், அந்த வகையில் இன்று தீபாவளி தீக்காய சிறப்பு நோயாளிகள் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி (Credit - ETVBharat TamilNadu)

ஆண்களுக்கு 12 படுக்கைகளுடன் ஒரு பிரிவும், பெண்களுக்கு 8 படுக்கைகளுடன் ஒரு பிரிவும், குழந்தைகளுக்கு ஐந்து படுகைகள் என 25 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளிக்காக பிரத்தியேகமாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டமாகும்.

தீக்காய சிகிச்சைக்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆண்டு தோறும் 2 ஆயிரம் பேர் என்ற அளவுக்கு தீக்காய நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடித்து ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக குறைந்து இருக்கிறது. இந்தாண்டும் இரண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டது.

பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டியவை:

  1. குழந்தைகள்,நோயாளிகள் மற்றும் வயதான முதியவர்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
  2. செல்லப் பிராணிகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது.
  3. பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்த கூடாது.
  4. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து பிரித்துப் பார்க்கக் கூடாது.
  5. கால் சட்டை பையில் பட்டாசுகளை வெடித்துக்கொண்டு மற்றொரு பட்டாசுகளை வெடிக்க கூடாது.
  6. காலிப்பெட்டிகளை அடுக்கி அதன் அடியில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
  7. சாதாரண குப்பைகளில் பட்டாசுகளை வெடித்து போடக்கூடாது.
  8. பட்டாசுகளை குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே வெடிக்க அறிவுறுத்த வேண்டும்.
  9. குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது.
  10. பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் ஒரு வாலியில் தண்ணீரை வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  11. பட்டாசுகளை நீண்ட மத்தாப்பு அல்லது ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
  12. திறந்த காற்றோட்டமான இடத்தில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  13. ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விடடு நின்னு மட்டும் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  14. ராக்கெட் போன்ற பட்டாசுகளை நேர்நிலையில் வைத்து தான் வெடிக்க வேண்டும்.
  15. வெடித்த பட்டாசு குச்சிகளை ஒரு மண் நிறைந்த வாளியில் போட வேண்டும்.
  16. பட்டு, நைலான் துணிகள் மற்றும் நீளமான உடைகளை அணிந்துக் கொண்டு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  17. இளைஞர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது செல்பி எடுக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

தீபாவளிக்காக 25 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் செவிலியர்களுக்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மருத்துவமனையிலும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்" என தெரிவித்தார்.

மேலும் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 3 ஆண்டுகளில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும், ஜப்பான் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடம் விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தீபாவளி பட்டாசை உங்க குழந்தைங்க பாதுகாப்பா வெடிப்பது எப்படி? சுகாதாரத் துறை அறிவுறுத்தல்கள் இதோ!

பருத்தி நூல் முதல் பட்டு வரை.. தீபாவளி விற்பனையில் களைகட்டும் கைத்தறி சேலைகள்!

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.