ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளில் இனி மூன்று ஷிப்ட்.. தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியீடு! - TN GOVT HOSPITAL EMPLOYEES - TN GOVT HOSPITAL EMPLOYEES

Three shift work: அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்டுகள் அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றுவதற்கான அரசாணையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் புகைப்படம்
சென்னை தலைமைச் செயலகம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 7:04 PM IST

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற முறையில் பணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை மூன்று ஷிப்ட் என்ற முறையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ்வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு (D Grade Employees) கீழ்க்காணுமாறு பணி நேரம் நிர்ணயித்து ஆணை வெளியிட உத்தேசித்து, அவ்வாறே ஆணையிடுகிறது.

1. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை (1st shift)

2. மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (2nd shift)

3. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை (3rd shift)

அதவாது, காலை 6 மணி முதல் மணி 2 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடரும் பிரிட்ஜ் தீ விபத்துகள்.. உங்கள் வீட்டு பிரிட்ஜ்-ஐ பாதுகாப்பான முறையில் பராமரிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.