ETV Bharat / state

"மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம்" - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்! - Minister DuraiMurugan - MINISTER DURAIMURUGAN

Mekedatu Dam Construction: மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்ற தீர்மானத்தில் தமிழ்நாடு அரசு இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 4:27 PM IST

சேலம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையினை நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மேட்டூர் அணையானது ஜூலை 28ஆம் தேதி அன்று பாசனத்திற்காக திறக்கப்பட்டது. மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் திறக்கப்பட்டு ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

அமைச்சர் துரைமுருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மாயவரம் தடுப்பணை கட்டப்பட்டது. அதேபோல், மோகனூரில் கதவணை அமைக்கப்பட்டது. மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் மேச்சேரி பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்ப பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா பிடிவாதமாக இருக்கும் நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், "மேகதாது அணையை கட்டவிட மாட்டோம் என்ற தீர்மானத்தில் தமிழக அரசு உள்ளது" என்றார்.

மேலும், “தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டதை செயல்படுத்த முடியாது. மேட்டூர் அணை உபரி நீரை மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் காவிரி நீரினை குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

முன்னதாக, நீர்வளத்துறை அமைச்சர் மேட்டூர் அணையின் 16 கண் மதகு, நீர்மின் நிலையம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அணையின் நீர்வரத்து, உபரிநீர் வெளியேற்றம், அணையின் நீர் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை நீர்வளத் துறையினரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu))

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “செந்தில் பாலாஜிக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! - EDAPPADI PALANISWAMY

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.