ETV Bharat / state

“ஆர்டிஇ சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இயலாது” - தமிழக அரசு வாதம்! - RTE admissions case - RTE ADMISSIONS CASE

Madras High Court: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளைச் சேர்க்க இயலாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 4:14 PM IST

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி, இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது, பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “பள்ளி அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தவறு. ஆந்திராவில் இது சம்பந்தமாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளையும் சேர்க்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ப்பது குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது” என்று வாதிட்டார்.

இதனையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், “மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்களை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்துகிறது. ஆனால், சிபிஎஸ்இ, ஐசிஎஸ் போன்ற பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்கள் நிர்ணயிக்க இயலாது. அதனால், இந்த பள்ளிகளை 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க இயலாது” என விளக்கம் அளித்தார்.

மேலும், “ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் அரசு நடுநிலைப் பள்ளியும் உள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதன் காரணமாக அரசுக்கு நிதிச்சுமை உள்ளது” என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி எங்கே? தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.