ETV Bharat / state

'ஆதிதிராவிடர் நலத்துறை' பெயரை மாற்றப் பரிந்துரை இல்லை - தமிழக அரசு சென்னை ஐக்கோர்டில் விளக்கம்! - Adi Dravidar welfare name change - ADI DRAVIDAR WELFARE NAME CHANGE

Adi Dravidar welfare department name change: ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்த குழு, பெயர் மாற்றம் செய்யப் பரிந்துரைக்கவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

Madras High Court Photo
Madras High Court Photo (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 5:59 PM IST

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்த குழு, பெயர் மாற்றம் செய்யப் பரிந்துரைக்கவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் 76 இனங்களைப் பட்டியல் இனத்தவர்கள் என கண்டறியப்பட்டு, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, "பட்டியல் சாதிகள் நலத்துறை" என அறிவிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதி திராவிடர் என்பது பட்டியலினங்களில் உள்ள 76 இனங்களில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்த குழு ஆய்வு செய்த போது, பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

துறைகளின் மொழிபெயர்ப்பு சரியானதாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் சாதாரண விஷயமல்ல எனவும், பல விவாதங்கள் இது சம்பந்தமாக நடந்து வருகிறது என குறிப்பிட்ட நீதிபதிகள் விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 38வது முறையாக நீட்டிப்பு! - SENTHIL BALAJI Judicial Custody

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.