ETV Bharat / state

இஸ்ரோ விஞ்ஞானிகளின் பெயரில் கல்வி உதவித்தொகை: உயர்கல்வி துறை அறிவிப்பு.! - Minister Ponmudy Announcement - MINISTER PONMUDY ANNOUNCEMENT

திறமையான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, உயர்கல்வி துறை கொள்கை விளக்கம் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த துறைசார்ந்து 15 புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலகம்
அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலகம் (Image Credits :ETV Bharat Taminadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 10:01 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது உயர்கல்வி துறையின் மீதான 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

உயர்கல்வி துறையின் 15 புதிய அறிவிப்புகள்:

  • அச்சு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 6 புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
  • கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் 21 கோடி மடிப்பீட்டில் கட்டப்படும்.
  • அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கு என தனி ஓய்வறைக் கட்டிடம் 8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்த எந்திரனியல் ஆய்வகம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • வேலூர்,தஞ்சாவூர், மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • GATE, IES, CAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
  • அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்படும்.
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் 7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
  • தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாறு ஆராய்ச்சி மன்றம் மீள்ருவாக்கம் செய்யப்படும்.
  • திருச்சிராப்பள்ளி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம் 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், உயர்கல்வி துறை கொள்கை விளக்கம் குறிப்பில், திறமையான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் பெயரில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) விஞ்ஞானிகளுக்கு, அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைக்காக தலா ரூ.25.00 லட்சம் ரொக்கத் தொகையை வழங்கி அவர்களை அரசு கௌரவித்துள்ளது.

மாணாவர்கள் இடையே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வத்தை ஏற்படுத்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டு, இளங்கலைப் பொறியியல் படிப்பை முடித்து முதுகலை பொறியியல் படிப்பைத் தொடரும் 10 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்ற அனைத்துக் கட்டணங்களுக்கும் சேர்த்து, கட்டணத்தையும் உதவித்தொகையாக, சாதனை படைத்த ISRO விஞ்ஞானிகளின் பெயரில் தமிழக அரசு வழங்கவுள்ளது.

இதையும் படிங்க: "தமிழகத்தில் இரு தடுப்பணைகள் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்"- அமைச்சர் துரைமுருகன்! - tamil nadu assembly session

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.