ETV Bharat / state

புதிய வருவாய் வட்டமாக கொளத்தூர் அறிவிப்பு! - Kolathur new Revenue Taluk - KOLATHUR NEW REVENUE TALUK

Kolathur: கொளத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 9:05 PM IST

சென்னை: சென்னை கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்றத் தொகுதி ஆகும்.

6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர் மற்றும் சிறுவள்ளூர் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. மொத்தமாக 3 லட்சத்து 78 ஆயிரத்து 168 பொதுமக்கள் வசிக்கும் கொளத்தூர் வட்டத்தில் பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், முதுநிலை மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், ஓட்டுநர் உள்ளிட்ட 36 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 - 2025 ஆண்டில் மீதமுள்ள 8 மாதங்களுக்கான தொடர் செலவினங்களுக்கு 1.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தொடரா செலவினங்களுக்கு 32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இப்போவாவது இத பண்ணிடுங்க..ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.