சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று பொதுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, பொதுத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். இதன்படி,
- மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை நடைமுறையைச் சார்ந்தோர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் நோக்குடன் அவர்களின் அன்றாட தேவைகளை அவர்களே பூர்த்தி செய்திட, தேவைக்கேற்ப இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது சிறப்பு பேட்டரி சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படும்.
- முன்னாள் படைவீரரின் மனைவி கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி சான்று பெற்றிருப்பின், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: ரூ.211 கோடியில் 2 புதிய துணை மின் நிலையங்கள் - மின்சாரத்துறையில் 19 புதிய அறிவிப்புகள்!