ETV Bharat / state

தவறான கல்விக் கொள்கையால் படித்த இளைஞர்கள் கையேந்தும் நிலை - ஆளுநர் ரவி வேதனை! - TN Governor RN Ravi - TN GOVERNOR RN RAVI

TN Governor RN Ravi: பல்கலைக்கழக துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்து ஆளுநர், புதிய தேசிய கல்விக் கொள்ளை தான் எதிர்காலம் என்றும், தவறான கல்விக் கொள்கையால், படித்து முடித்த இளைஞர்கள் தற்போது வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 7:18 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆர்.என். ரவி தலைமையில் உதகையில் இன்று துவங்கியது. மாநாட்டில் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ் குமார் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 48 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேசியதாவது:

2021ஆம் ஆண்டு நான் ஆளுநராக பொறுப்பேற்றபோது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்னைகள் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

புதிய தேசிய கல்வி கொள்ளை தான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின்தங்கி உள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 5ஆம் இடத்தில் இருந்த நாம், 11ஆம் இடத்திற்கு பின்தங்கிவிட்டோம். தற்போது மீண்டும் 5ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3ஆம் இடத்திற்கு முன்னேற உள்ளோம்.

தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள், தற்போது வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டுவிட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும்.

கற்பித்தல் குறித்து திருவள்ளுவர் கூறிய ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற கூற்றுப்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டுவர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்” என்று ஆளுநர் ரவி உரையாற்றினார்.

இதையும் படிங்க: "வரும் கல்வியாண்டிற்கான விலையில்லா லேப்டாப் வழங்கும் அறிவிப்பை வெளியிடுக" - ஈபிஎஸ் வலியுறுத்தல்! - Free Laptop Scheme

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.