ETV Bharat / state

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்றவற்றுக்கான தடை நீட்டிப்பு! - Ban on Gutka - BAN ON GUTKA

Ban on Gutka: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமை செயலகம்
தலைமை செயலகம் (Credits: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 5:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களை விற்பதும், பதுக்குவதும், கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால், கடந்த 2013-ம் ஆண்டில் இதற்கான தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், “குட்கா, பான் மசாலா போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பொருட்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதால் தடை செய்யப்பட வேண்டும். இதற்கான உத்தரவை கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

இதன்படி குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை தயாரித்தல், பதுக்கி வைத்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையானது மேலும் ஓராண்டுக்கு, அதாவது வரும் 2025-ம் ஆண்டு மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த மோதல்; கட்டிப்பிடித்து சமாதானமான காவலர் - நடத்துநர்.. வைரலாகும் வீடியோ! - Police Vs TNSTC Issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.