சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், காவல்துறை துணை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கூடுதலாக 32 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாக இருந்த Dr.V.சசி மோகன், ஈரோடு மாவட்டம் சிறப்பு பணிக்குழு எஸ்.பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை மனித உரிமை ஆணையம் எஸ்.பியாக இருந்த S.மகேஸ்வரன், ஆவடி சரகத்திற்கு துணை காவல் ஆணையராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த V.பத்ரி நாராயணன், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஈரோடு மாவட்டம் சிறப்பு பணிக்குழு எஸ்.பியாக இருந்த P.ராஜன், திருச்சி ரயில்வே பாதுகாப்பு எஸ்பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த L.பாலாஜி சரவணன், கோவை மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி எஸ்பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஞாயிறு அன்று (ஆக்.4), தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றும் செய்யத் தொடங்கிய தமிழக அரசி, இன்று மட்டும் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 32 காவல்துறை அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஐந்தே நாட்களில் இரண்டாவது முறை.. 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி!