சென்னை: பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில், தற்போது முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 20 கல்லூரிகளில் மட்டுமே 60 சதவீதத்திற்கு அதிகமான இடங்கள் நிரம்பி உள்ளது.
30 கல்லூரிகளில் மட்டுமே 40 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பி இருக்கின்றன. மேலும், 206 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இலக்கத்தில் மட்டுமே இடங்கள் நிரம்பியிருக்கின்றது என்ற தகவலும் வெளியாகி உள்ளன.
முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அதிக இடங்களை நிரப்பிய கல்லூரிகளின் வரிசையில் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகம், குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட பத்து கல்லூரிகளில் அதிக இடங்கள் நிரம்பியிருக்கின்றன. முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 18 ஆயிரத்து 794 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 433 பொறியியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 528 இடங்கள் உள்ள நிலையில், 10 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன" என கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பொறியியல் படிப்பிற்கான 2ஆம் சுற்று கலந்தாய்வு: 1,56,734 இடங்கள் உள்ளதாக அறிவிப்பு..! - Engineering 2nd round Counselling