ETV Bharat / state

“சவால் விட்டு சொல்கிறேன்.. நீட்டை கொண்டு வந்தது இவர்கள் தான்..” - செல்வப்பெருந்தகை ஆவேசம்! - SELVAPERUNTHAGAI

Selvaperunthagai: காங்கிரஸ் ஆட்சியில் ஒருபோதும் நீட் தேர்வு வரவில்லை எனவும், சவால் விட்டு சொல்கிறேன் நீட்டை கொண்டு வந்தது மோடி அரசு தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு
செல்வப்பெருந்தகை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 7:47 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும் போது, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு புலன் விசாரணை நடைபெறும் நிலையில், அதைp பற்றி விவாதிப்பது சரியாக இருக்காது. 11 நபர்களை கைது செய்துள்ளனர். உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவர், பெண் என்று பாராமல் ஜெயலலிதாவை விமர்சிக்கின்றார். தலைவர்களின் குடும்பத்தை விமர்சிக்கின்றார், இப்போது நீதியரசர் சந்துருவை விமர்சிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் யாரெல்லாம் கீழ்த்தரமான அரசியல் செய்கின்றனர் என பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தோம். தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கவில்லை. தனிப்பட்ட முறையில் யாரையும் பழி வாங்கவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பு, காவேரி ஒழுங்காற்றுக் குழு தீர்ப்பு ஆகியவற்றை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிமையை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்கக் கூடாது. கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். மின் கட்டணம் உயர்வுக்கு உதய மின் கட்டணம் திட்டம் தான் பிரச்னை. மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் இருந்தது. தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் சமூக நீதி என்பதற்காக உள்ள கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. அக்கட்சியினர் தான் பாஜகவிடம் கேட்க வேண்டும். தற்போது இந்தியாவில் 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெற்று வருகிறது. இதைப் பற்றி பேசினால் செய்தியாளர்கள், அரசியல்வாதிகள் மீது வழக்கு போடுகின்றனர்.

பாஜக ஆட்சியில் முதலமைச்சர்களையே சிறைப்படுத்துகிறார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக அரசு தான். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்திய மருத்துவக் கழகம் தேர்வு மூலம் மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பரிந்துரை மட்டுமே நீதிமன்றத்தில் செய்யப்பட்டது. அதன் பின்பு நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின் மோடி அரசே நீட் தேர்வை கொண்டு வந்தது.

காங்கிரஸ் ஆட்சியில் ஒருபோதும் நீட் தேர்வு வரவில்லை, மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போதும் தமிழ்நாட்டிற்குள் நீட் வரவில்லை. ஒரே மாதிரியான கல்வி மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் சிபிஎஸ்இ, மெட்ரிக், சமச்சீர் கல்வி ஒன்றிணைத்த பின்பு தான் நீட் தேர்வு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். சவால் விட்டு சொல்கிறேன், நீட்டைக் கொண்டு வந்தது மோடி அரசு தான்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்திற்கு புதிய சிக்கல்.. இ-சேவை மையத்தினரை அவதூறாக சித்தரிப்பு? - INDIAN 2 E SEVAI CENTER CONTROVERSY

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.